ஜெயலலிதா
ஜெயலலிதா TWitter

ஜெயலலிதா : அன்பிற்காக ஏங்கிய Jayalalithaa - 20 சுவாரஸ்ய தகவல்கள்

மறைத்த முதல்வர் ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்யமான 20 தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

1. அரசியலில் உச்சம் தொட்டப்பின் அவரை 'அம்மா' என்று அனைவரும் அழைத்தாலும், இறுதிவரை அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை 'அம்மு' என்றே அழைத்தனர்

Newssense

2. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1982ம் ஆண்டு இணைந்தார் ஜெயலலிதா..அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா.

Newssense

3. உள்ளூர் அரசியல் மட்டுமல்ல, உலக அரசியல நிலவரங்களையும் தொடக்கம் முதலே கூர்ந்து கவனித்தவர் ஜெயலலிதா. "ஜெயலலிதாவிடம் அயர்லாந்து தேர்தல் பற்றியும் உரையாடலாம். மாசேதுங் பற்றியும் விவாதிக்கலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்

Newssense

4. ராஜ்ய சபா உறுப்பினராக 1984ல் தேர்வானார் ஜெயலலிதா...ராஜ்ய சபாவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185. இதே இருக்கைதான் சி.என். அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 1963 காலக்கட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

Newssense

5. ஒரு முறை கூட்டணி தொடர்பாக இந்திரா காந்திவுடன் பேச பத்திரிகையாளர் சோலைவுடன் ஜெயலலிதாவையும் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர். இவர்களுக்கு இந்திரா காந்தி ஒதுக்கிய நேரம் வெறும் 10 நிமிடங்கள். ஆனால், அந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நீண்டது. அதற்கு ஒரே காரணம் ஜெயலலிதாவின் நாவன்மை.

Newssense

6. ஆனால், இதே சந்திப்புதான் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும் காரணமாக அமைந்தது. இந்திரா காந்தியை சந்தித்துவிட்டு வெளியே வந்தவுடன், சந்திப்பு குறித்து எம்.ஜி.ஆரிடம் தகவல் தெரிவிக்க சொன்னார் சோலை. ஆனால், அதை ஊதாசீனப்படுத்திய ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை தொலைப்பேசியில் அழைத்து தகவல் சொல்லவில்லை. இதனால், கடும் கோபமடைந்தார் எம்.ஜி.ஆர்.

Newssense

7. 1984-ஆம் ஆண்டு மே மாதம் கொள்கைபரப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் எழுதினார் ஜெயலலிதா.ஆனால், இந்த ராஜினாமாவை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பின் இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Newssense

8. இவ்வுளவு பிரச்சனைகளுக்கு பிறகு செப்டம்பர் மாதம் 1985ம் ஆண்டு கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா.

Newssense

9. எம்.ஜி.ஆர் - ன் இறுதி ஊர்வலத்தில் அவமானப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா.

Newssense

10. அதிமுக இரண்டாக உடைந்தது. ஓர் அணிக்கு ஜெயலலிதா தலைவராகவும், இன்னொரு அணிக்கு எம்.ஜி.ஆர்-ன் மனைவி ஜானகி தலைவராகவும் செயல்பட்டனர்.

Newssense

11. ஜானகி சிறிது காலம் தமிழக முதல்வராக இருந்தார். ஆனால், மூன்று வாரங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது, இதனை தொடர்ந்து நடந்த பொது தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

Newssense

12. ஜெயலலிதா அணி 27 இடங்களை கைப்பற்றியது. ஜானகி அணி 2 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது. பின், ஜானகி அணி ஜெயலலிதா அணியுடன் இணைந்தது. இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்தது.

Newssense

13. 1989ம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தின் முதல் எதிர்கட்சி தலைவர் ஆனார்.மார்ச் 25, 1989-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி பட்ஜெட் உரையை படித்துக் கொண்டிருந்த போது, கருணாநிதி பட்ஜெட் உரையை படிக்க கூடாது என்று ஜெயலலிதாவும், அதிமுக உறுப்பினர்களும் கூச்சலிட்டதாகவும், கருணாநிதியின் மூக்கு கண்ணாடியை தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Newssense

14. இதனை தொடர்ந்து ஜெயலலிதா, தன்னை சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தாக்கியதாகவும், தன் புடவையை பிடித்து இழுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்திற்குள் வருவேன் என்று அப்போது சபதமேற்றார் ஜெயலலிதா.

Newssense

15. ஜெயலலிதாவின் பெயர் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கிறது. துரதிருஷ்டமாக, இது நல்ல விஷயத்துக்காக அல்ல. ஆம், 1995-ஆம் ஆண்டு தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு மிக பிரம்மாண்டமாக 1.5 லட்சம் பேரை அழைத்து திருமணம் நடத்தினார். இதுதான் கின்னஸில் இடம் பிடித்தது. உலக ஊடகங்கள் அனைத்தும் இந்த பிரம்மாண்ட திருமணம் குறித்து எழுதி இருந்தன.

Newssense

16. ஜெயலலிதா முதன்முறை முதல்வராக பொறுப்பேற்ற போது, அவர் சம்பளம் பெற மறுத்தார். "எனக்கு பல்வேறு விதங்களில் நல்ல வருமானம் வருகிறது. நான் மக்கள் சேவை செய்யதான் வந்துள்ளேன். எனக்கு சம்பளம் வேண்டாம்" என்றார். ஆனால், அரசாங்க ஊழியர் நிச்சயம் சம்பளம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அவர் சம்பளமாக ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டார்.

Newssense

17. ஜெயலலிதா தன் சிறு வயதில் காதலுக்கு தூது சென்றிருக்கிறார். தி. நகர் சிவஞானம் தெருவில் வசித்த போது தன் வீட்டிற்கு அருகே வசித்த பெண்ணின் காதலுக்காக தூது சென்றார் ஜெயலலிதா. அந்த பெண்ணின் காதலனிடம் ஜெயலலிதா பேசிக் கொண்டிருக்கும் போது, ஜெயலலிதா வீட்டு பால்காரர் பார்த்துவிகிறார். ஜெயலலிதாதான் அந்த பையனை காதலிக்கிறார் என்று தவறாக எண்ணி, யாருக்காக ஜெயலலிதா தூது சென்றாரோ அந்த வீட்டிற்கே சென்று, ஜெயலலிதாவின் நடவடிக்கை சரி இல்லை. இனி உங்கள் பெண்ணை அந்த பெண்ணுடன் சேர அனுமதிக்காதீர்கள் என்று சொல்லிவிடுகிறார். அந்த பெண்ணும் கடைசி வரை உண்மையை சொல்லவில்லை. தூது சென்றதால் தனக்கு கிடைத்தது கெட்ட பெயர்தான். "அந்த பெண் உண்மையை சொல்லி இருந்தால் கூட எனக்கு கெட்ட பெயர் கிடைத்து இருக்காது. அவருக்காக நான் தூது சென்றேன். ஆனால், அவர் எனக்கு துரோகம் இழைத்துவிட்டார். இதை நினைத்து சிறு வயதில் பல நாட்கள் அழுது இருக்கிறேன்" என்று ஜெயலலிதாவே பின் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Newssense

18. சிறு வயது முதலே அன்பிற்காக மிகவும் ஏங்கி இருக்கிறார் ஜெயலலிதா. ஒரு பேட்டியில் ஜெயலலிதா, "நான் இதுவரை நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை. கதைகளில், இலக்கியங்களில், திரைப்படங்களில் வேண்டுமானால் அத்தகைய நிபந்தனையற்ற அன்பு இருக்கலாம். ஆனால், அத்தகைய அன்பு நிஜவாழ்க்கையில் இருப்பதாக நான் கருதவில்லை" என்று கூறியுள்ளார்.

Newssense

19. 1998-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் சாமன்ய மக்கள், ஒரு வார இதழ் மூலம் சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். அதில் ஒன்று, "உங்களுக்கு பின் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவர் யார் என்று கருதுகிறீர்கள்?". அதற்கு ஜெயலலிதா , "தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதனை முடிவு செய்வார்கள்"என்றார்.

Newssense

20. "நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்." இதுவும் ஜெயலலிதா தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி சொல்லும் வாசகம்.

Newssense

ஜெயலலிதா
ஜெயலலிதா மரணம் : சசிகலா குற்றவாளி? - ஆறுமுகசாமி ஆணையம் கூறும் 10 முக்கியத் தகவல்கள்!
21.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com