பேரறிவாளன் விடுதலைக்காக உயிர் நீத்த செங்கொடியை நினைவிருக்கிறதா?

11 ஆண்டுகளுக்கு முன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக, தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார் செங்கொடி. இன்று பேரறிவாளன் விடுதலையாகியுள்ள நிலையில் மீண்டும் நினைவுக்கூரப்படுகிறார்.
Sengodi
SengodiTwitter
Published on

காஞ்சிபுரம் ஓரிக்கையை சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் செங்கொடி. இவர் காஞ்சி மக்கள் மன்றத்தில் செயற்பாட்டாளராகவும், பறை இசைக் கலைஞராகவும் இருந்தவர். 21 வயதான செங்கொடி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களது விடுதலை மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர்களைத் தூக்கிலிடக்கூடாது என்பதை வலியுறுத்த, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

Sengodi
SengodiTwitter

ராஜிவ் காந்தியைக் கொலை செய்ய, குண்டு தயாரிக்க பேட்டரி வாங்கிக்கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 1998 ஆம் ஆண்டு இவருடன் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் இந்த தேசதுரோக குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தமிழர்கள் 7 பேரும் குற்றமற்றவர்கள் என்றும், இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு தரப்புகளில் போராட்டங்கள் நடந்து வந்தன.

கைதிகள் 7 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனுவையும் அளித்தனர். ஆனால் 12 ஆண்டுகாலமாகப் பதவியேற்ற எந்த ஜனாதிபதியும் இந்த மனுவை கையில் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் 2011 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி வகித்த பிரதிபா பாட்டில் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை என்று முடிவானது.

Perarivaalan
PerarivaalanTwitter

தமிழகமே இந்த தீர்ப்பால் கொந்தளித்து வந்த நிலையில், செங்கொடி, பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி ஆகஸ்ட் 28, 2011, காஞ்சிபுரத்தில், தீக்குளித்து தன்னை மாய்த்துக்கொண்டார். இந்த செயல் ஏற்கனவே கொந்தளித்துக்கொண்டிருந்தவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரது இறுதி ஊர்வலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் பங்கேற்றனர்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பேரறிவாளன் விடுதலையாகியுள்ள நிலையில், செங்கொடியின் உயிர் தியாகம் வீண் போகவில்லை என்று பலரும் உணர்ச்சி பொங்க அவரை நினைவுகூர்ந்துள்ளனர்.

பேரறிவாளனின் இல்லமும் இவரது மறைவுக்கு பின், செங்கொடி இல்லம் என்று பெயரிடப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com