மதராசப்பட்டினம் என்றழைக்கப்பட்ட மெட்ராஸ், பிற்காலத்தில் சென்னை என பெயரிடப்பட்ட வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே. பல கலாச்சாரங்களை கொண்ட மக்கள் வாழும் ஒரு பெரு நகரம், படிப்பு, வேலை என வாழ்வாதாரத்தை தேடி வரும் மனிதர்களை கை கொடுத்து தூக்கிவிட்ட பெருமை இதற்கு உண்டு. சென்னைக்கு வந்தவர்கள், வாழ்க்கையில் தோற்றார் என்ற கதை மட்டும் கேள்விப்பட்டதில்லை...அது இந்நகரத்தின் சிறப்பு!
இன்று சென்னை தனது 383வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த பிறந்தநாளில், சென்னையின் 5 வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் குறித்து காணலாம்..
1712ல் கட்டப்பட்ட இந்த தேவாலயம் 1772ல் மறுசீரமைக்கப்பட்டது. இந்த தேவாலயத்தில் அன்னை மேரி இயேசு கிறிஸ்துவை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது தான் அர்மேனியன் சர்ச்சின் தனித்தன்மை பெல்ஃப்ரி என்று அழைக்கப்படும் மணி கோபுரத்தில் மூன்று வரிசைகளில் ஆறு மணிகள் உள்ளன. மணிகள் ஒவ்வொன்றும் சுமார் 150 கிலோ எடையை கொண்டவை.
1640களில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ஐரோப்பிய மக்களுக்கான குடியிருப்பு தளமாகவும், வர்த்தக நிலையமாகவும் கட்டப்பட்டது. பிறகு 1641ல் கோரமண்டல் கடற்கரையில் கிழக்கு இந்திய கம்பனியின் தலைமையகமாக மாறியது.
முன்பு பேன்கெட்டிங் ஹால், மெட்ராஸ் (விருந்து மண்டபம்) என்றழைக்கப்பட்ட ராஜாஜி மண்டபம், ஜான் கோல்டிங்ஹம் என்பவரால் கட்டப்பட்டது. நான்காம் ஆங்க்லோ - மைசூர் போரில், மன்னர் திப்பு சுல்தான் வெற்றிகண்டதை கவுரவிக்க, கட்டப்பட்டது தான் ராஜாஜி ஹால்
சுமார் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில், 1832ல் பிரிடிஷ் எலீட் குரூப்பால் மௌன்ட் ரோட்டில் கிளப் கட்டப்பட்டது. பின்னர் அடையாறுக்கு மாற்றப்பட்ட இந்த கிளப் தான் முதன் முதலில் பெண்களுக்கு மெம்பர்ஷிப் வழங்கியது. முதலில் ஐரோப்பியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இந்த கிளப், 1960 ஆம் ஆண்டிலிருந்து இந்தியர்கள் அனுமதிப்பட்டனர்.
இது 1880- 90 வாக்கில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்கட்டிடம், விக்டோரியா மகாராணியின் பொன்விழாவை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தைக் கட்டுவதற்கான மொத்தச் செலவு அக்காலத்தில் பதினேழாயிரம் ரூபாயாம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust