எறும்புத் தொல்லைகள் நம் வீடுகளில் பெரும் பிரச்சனையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக உங்கள் சமையலறையில் அவற்றை கண்டால், சாப்பிடவே தோணாது. எறும்புகளில் 12,000 வகைகள் உள்ளன.
அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. சில உணவுகளை சுகாதாரமற்றதாக மாற்றும், சிலவை வீட்டினை மாசுபடுத்தும். எறும்புகள் கோடை காலத்தில் நம் வீட்டை ஆக்கிரமிக்க வாய்ப்புகள் அதிகம். நீங்கள் இப்போது சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கான பதிவு இது!
சமையலறை பொருட்களைப் பயன்படுத்தி எறும்புகளை எவ்வாறு அகற்றுவது என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
எறும்புகள் பொதுவாக வலுவான நறுமணங்களால் விரட்டப்படுகின்றன, ந seறுமண மூலிகைகள் அவற்றை உங்கள் வீட்டிலிருந்து விரட்ட உதவும்.
புதினா போன்ற மூலிகைகள் எறும்பை விரட்ட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எறும்புகளால் கான்ஃப்ளோரை ஜீரணிக்க முடியாது. அது அவற்றை விரட்டுவதற்கு சரியான தீர்வு. எறும்பு பவுடர்களுக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.
வினிகரின் வலுவான வாசனை எறும்புகளை விரட்டி விடும். உங்கள் வீட்டில் அதிகமாக எறும்புகள் இருந்தால் அந்த இடங்களில் வினிகர் மற்றும் நீர் கரைசலை தேய்த்து வையுங்கள். அந்த வாசனைக்கு எறும்புகள் அண்டாது.
மிளகின் வாசனை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எலும்புகளுக்கும் எரிச்சலூட்டும்.
அவற்றைப் போக்க, சிறிது மிளகு அரைத்து, உங்கள் வீட்டைச் சுற்றி, குறிப்பாக மரச்சாமான்கள் அல்லது சாதனங்களுக்குப் பின்னால் பரப்பவும்.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் காணப்படும் டி-லிமோனைன் சாறு, எறும்புகளுக்கு நச்சுத்தன்மையுடையது.
சில நாட்களுக்கு ஒரு ஜாடி தண்ணீரில் எலுமிச்சை தோல்களை வைக்கவும், தண்ணீர் நிறம் மாறியதும், எறும்புகள் அதிகமாக இருக்கும் இடத்தில் அதனை துடைக்க பயன்படுத்தினால்
எறும்புகளை விரட்டுவதுடன் உங்கள் வீட்டிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
எறும்புகளை விரட்ட மிக மலிவான பொருள் என்றால் அது உப்பு. சிறிது தண்ணீரில் அதிக அளவு உப்பைக் கரைத்து கொதிக்க வைத்து, எறும்புகள் அதிகமாக உலாவும் இடங்களில் தெளிக்கவும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust