'பொநெட் மகாக்' வகை குரங்கு வயிற்றில் அறுவை சிகிச்சை - சென்னை கால்நடை மருத்துவர்கள் சாதனை

சுமார் 3 மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர், கிண்டி தேசிய பூங்காவிற்கு, குரங்கு அனுப்பப்படும்”
குரங்கு

குரங்கு

Facebook

Published on


சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக வளாகத்தில் (ஐஐடி) கலைமான்கள், புள்ளிமான்கள், குள்ளநரிகள், காட்டுப் பூனைகள், குரங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன. இவை அங்கு உள்ள மாணவர்களுடன் இயல்பாக வாழ்ந்து வருகின்றன. கடந்த 10-ம் தேதி இங்கு வசிக்கிற 'பொநெட் மகாக்' வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்று, அதிக ரத்தப்போக்குடனும், வயிற்றில் பலத்த காயத்துடனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக வனத்துறைக்குப் புகார் சென்றுள்ளது.

புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் குழு சென்னை ஐஐடி வளாகத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு அவர்கள் 6 வயது குரங்கு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதனை மீட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>குரங்கு</p></div>
நாகாலாந்து மலைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது பெரிய புள்ளி சிறுத்தை

இதனைக் குறித்து சென்னை வனவிலங்கு காப்பாளர் பிரசாந்த் கூறியதாவது, “மீட்கப்பட்ட குரங்கு சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனையில், சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. காயமடைந்த குரங்கை ஆய்வுசெய்தபோது, குடலின் ஒரு பகுதி சேதமடைந்து ரத்தம் வந்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குரங்குக்கு ஸ்கேன் செய்து பார்த்த கால்நடை மருத்துவர்கள் குழு, குரங்குக்கு மயக்க மருந்து அளித்து, குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, குரங்குக்கு மயக்கமருந்து அளித்து, குடலின் சேதமடைந்த பகுதிகளை, மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். அதன்பின்னர் அவர்கள், குடலின் மீதமிருந்த பகுதிகளை இணைத்து (enterectomy and anastomosis) சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 3 மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர், கிண்டி தேசிய பூங்காவிற்கு, குரங்கு அனுப்பப்படும்” என்றார்.

இறக்கும் நிலையிலிருந்த குரங்கை வனத்துறையினர் மீட்டு மருத்துவர்கள் மூலம் அதற்கு மறுவாழ்வு அளித்துள்ள நிகழ்வு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com