”உங்களுக்கு தின்பண்டங்கள் இல்லை” - தலித் மாணவர்களை திருப்பி அனுப்பிய கடைக்காரர் கைது

இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பட்டியலின மாணவர்கள்
பட்டியலின மாணவர்கள்Twitter
Published on

தென்காசி அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரிடம் தீண்டாமையை வெளிப்படுத்திய பெட்டிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களிடையே சமூக ரீதியாக அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு சமூகத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்திருக்கின்றனர்.அதில் ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தலித் மாணவர்கள் அந்த கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்றனர்.

அப்போது தங்கள் சமூகத்தினருக்குப் பொருட்கள் வழங்கக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறி தின்பண்டங்களைக் கொடுக்காமல் மாணவர்களைத் திருப்பி அனுப்பினார் கடைக்காரர்

பட்டியலின மாணவர்கள்
100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களுக்கு இறுதி சடங்கு - கோவை பெண்ணின் நெகிழ்ச்சி கதை

இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பட்டியலின மாணவர்கள்
"நீதித்துறை ஊழலில் சிக்கியுள்ளது" சர்ச்சை கருத்தால் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com