உலகின் மிக உயரமான தேயிலை தோட்டம் எது தெரியுமா? ஏன் இங்கு நிச்சயம் செல்ல வேண்டும்?

1900களின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த தேயிலை தோட்டம், மூணாறிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள தேயிலை தொழிற்சாலை பாரம்பரிய முறைபடியே செயல்படுவதால் இந்த இடம் இன்னும் சிறப்புடையதாக உள்ளது.
உலகின் மிக உயரமான தேயிலை தோட்டம் எது தெரியுமா? ஏன் இங்கு நிச்சயம் செல்ல வேண்டும்?
உலகின் மிக உயரமான தேயிலை தோட்டம் எது தெரியுமா? ஏன் இங்கு நிச்சயம் செல்ல வேண்டும்?Twitter
Published on

கொழுக்குமலையின் தேயிலைத் தோட்டங்கள் உலகிலேயே மிக உயரமானவை என்று அறியப்படுகிறது. இந்த தேயிலை எஸ்டேட் இயற்கையின் கண்கவர் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்கும். குளு குளு கொழுக்குமலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

கொழுக்குமலை தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7130 அடி உயரத்தில் அமைந்துள்ள இது உலகின் மிக உயரமான தேயிலை தோட்டமாக கருதப்படுகிறது.

இந்த பரந்து விரிந்த தோட்டம் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவியிருக்கிறது. சுமார் 12 டன் தேயிலையை உற்பத்தி செய்கிறது.

இந்த இடத்திற்கு நீங்கள் சென்றால் அங்கிருக்கும் சுற்றுலா வழிகாட்டியின் உதவியுடன் தேயிலைத் தோட்டத்தைச் சுற்றி பார்க்கலாம்.

தொழிலாளர்கள் தேயிலைகளை எவ்வாறு சேகரிக்கிறார்கள், பின்னர் அவை தேநீராக பதப்படுத்தப்படுகின்றன என்பதை பார்வையாளர்கள் இங்கு தெரிந்துகொள்ளலாம். இங்கு ஆண்டு முழுவதும் வானிலை இனிமையானதாக இருக்கும். இருந்தாலும் இந்த இடத்தைப் பார்வையிட சிறந்த நேரம் நவம்பர், டிசம்பர் போன்ற மாதங்கள் தான்.

1900 களின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட கொழுக்குமலை தேயிலை தோட்டம், மூணாறிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள தேயிலை தொழிற்சாலை பாரம்பரிய முறைபடியே செயல்படுவதால் இந்த இடம் இன்னும் சிறப்புடையதாக உள்ளது.

உலகின் மிக உயரமான தேயிலை தோட்டம் எது தெரியுமா? ஏன் இங்கு நிச்சயம் செல்ல வேண்டும்?
ஊட்டி : சுற்றுலா பயணிகளை கவரும் ’மலை ரயில்’ - ஏன் இதில் நிச்சயம் பயணிக்க வேண்டும்?

தேயிலை தோட்டத்தை தவிர கொழுக்குமலையில் சூரிய அஸ்தமனத்தை கட்டாயமாக பார்க்க வேண்டும். சாகச விரும்பிகள் கொழுக்குமலையில் நடைபயணம் மேற்கொள்ளலாம்.

கொழுக்குமலையிலிருந்து ஒன்றரை மணி நேர ஜீப் சவாரி உங்களை மூணாறுக்கு அழைத்துச் செல்லும், அதேசமயம் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி, மதுரை மற்றும் திருச்சூர் போன்ற இடங்களிலிருந்து இந்த தேயிலை தோட்டத்திற்கு சாலை வழியாக செல்லலாம்.

உலகின் மிக உயரமான தேயிலை தோட்டத்தை பார்வையிட்ட பிறகு, தேயிலை தோட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு முகாமில் தங்குவதற்கும் திட்டமிடலாம்.

உலகின் மிக உயரமான தேயிலை தோட்டம் எது தெரியுமா? ஏன் இங்கு நிச்சயம் செல்ல வேண்டும்?
Jibhi: இமாச்சலில் இருக்கும் இந்த Off Beat மலை கிராமத்தின் சிறப்பு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com