Vijayakanth : தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் - தலைவர்கள் இரங்கல்!
Vijayakanth : தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் - தலைவர்கள் இரங்கல்!Twitter

விஜயகாந்த் மறைவு : "கலையுலகம் இருக்கும் வரை கேப்டனின் புகழ் இருக்கும்"- நடிகை ஆர்த்தி

கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்னும் சற்று நேரத்தில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட உள்ளது!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்னும் சற்று நேரத்தில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட உள்ளது!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு அவரது உடல் வைக்கப்பட்டுள்ள இல்லத்தின் முன்பு குவிந்த தொண்டர்கள்!

இயக்குநர் பாரதிராஜா இரங்கல்

"எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது விஜயகாந்த்-ன் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும்,  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் முதலமைச்சர்

கமல்ஹாசன் இரங்கல்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்படும். விஜயகாந்தின் உடல் இன்றும், நாளையும் அவரது உடல் பொதுமக்கள், கட்சியினர் மரியாதைக்காக வைக்கப்பட உள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடக்க இருப்பதாக தகவல்

விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி உருக்கமான இரங்கல்!

“இனிமே எங்க குறைகளை யாரிடம் சொல்வோம்..” -நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் வையாபுரி உருக்கம்!

விஜயகாந்த் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்!

விஜயகாந்த் மறைவிற்கு நடிகை த்ரிஷா இரங்கல்!

விஜயகாந்த் மறைவிற்கு திமுக எம்.பி கனிமொழி இரங்கல்!

“தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும்”|

“விஜயகாந்த் மறைவு, மிகவும் துயரமான செய்தி..” -மனம் உடைந்து பேசிய நடிகை ரோகிணி

“விஜயகாந்த் எனக்கு அண்ணன் அல்ல.. அம்மா..” - கண்ணீருடன் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

கேப்டன் விஜயகாந்த் மறைவு - நடிகர் சோனுசூட் புகழஞ்சலி

“எனது முதல் படமான 'கள்ளழகர்' லெஜெண்ட் விஜயகாந்தின் பரிசு. எனது திரைப்பயணத்தில் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்” நடிகர் சோனுசூட் புகழஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

சென்னையில் இன்று நடக்கவிருந்த 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி ‘கேப்டன்’ விஜயகாந்த் மறைவையொட்டி ஒத்திவைக்கப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பா.ரஞ்சித் அறிவிப்பு!

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக அலுவலகம் வந்தார் நடிகர் கவுண்டமணி!

புரட்சிக்கலைஞர் விஜயகாந்தின் மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழ்நாடு அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு" - சிவகார்த்திகேயன் இரங்கல்

"ஒரு வெள்ளந்தியான மனிதரை நாம் அனைவரும் இழந்துள்ளோம்" - அஞ்சலி செலுத்தியபின் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு நடிகை சிம்ரன் இரங்கல்!

நிஜத்திலும் அவர் ஹீரோ” கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் பதிவு!

கலையுலகம் இருக்கும் வரை கேப்டனின் பெயரும், புகழும் இருக்கும்" விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகை ஆர்த்தி பேட்டி

"கேப்டன் என்ற வார்த்தைக்கு 100% பொருத்தமானவர்..." தேனியில் உள்ள படப்பிடிப்புத் தளத்தில் விஜயகாந்தின் படத்திற்கு மரியாதை செய்த பின் நடிகர் சூரி பேட்டி!

அண்ணா ஆர்ச் - கோயம்பேடு சாலை, வடபழனி - கோயம்பேடு சாலை, நெற்குன்றம் - கோயம்பேடு சாலை மற்றும் திருமங்கலம் - கோயம்பேடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக சென்னை போக்குவரத்து போலீசார் தகவல்

“யாரும் திட்ட முடியாத அளவுக்கு வாழ்ந்தவர் ‘கேப்டன்’ விஜயகாந்த்” -நடிகர் தம்பி ராமையா

“என்னுடைய 40 ஆண்டுக்கால அனுபவத்தில் கேப்டனை போல ஒரு மனிதரைப் பார்த்ததே கிடையாது..” -இயக்குநர் கஸ்தூரி ராஜா

“வெள்ளந்தியான மனசாலும், கம்பீரமான குரலாலும் ஆளுமைகளுக்கெல்லாம் ஆளுமையாகத் திகழ்ந்தவர் தான் ‘கேப்டன்’ விஜயகாந்த்” -நடிகர் அமீர்

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்!

logo
Newssense
newssense.vikatan.com