"உண்மைக்கு புறம்பாக பேசும் ரஜினி, கமல்; நிகழ்வை புறக்கணித்த விஜய், அஜித்" - ஜெயக்குமார்

இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான திரு.விஜய் மற்றும் திரு.அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர்.
"உண்மைக்கு புறம்பாக பேசும் ரஜினி, கமல்; நிகழ்வை புறக்கணித்த விஜய், அஜித்" - ஜெயக்குமார்
"உண்மைக்கு புறம்பாக பேசும் ரஜினி, கமல்; நிகழ்வை புறக்கணித்த விஜய், அஜித்" - ஜெயக்குமார் Twitter

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

"கலைஞர் திரைத்துறையில் இருந்திருந்தால் இன்னும் பல எம்.ஜில்.ஆர், சிவாஜிகளை உருவாக்கியிருப்பார்" போன்ற கருத்துகள் அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி, கமலுக்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ ஜெயக்குமார், "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரு.கருணாநிதி அவர்களால் தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் திரு.ரஜினிகாந்த் மற்றும் திரு.கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்.

இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று! புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார்.

ஆயிரமாண்டு கடந்தாலும் அவர் தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது! அவரது உதவியால் தான் கருணாநிதியே முதலமைச்சரானார்.

சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே? இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான திரு.விஜய் மற்றும் திரு.அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர்." என ட்வீட் செய்துள்ளார்.

"உண்மைக்கு புறம்பாக பேசும் ரஜினி, கமல்; நிகழ்வை புறக்கணித்த விஜய், அஜித்" - ஜெயக்குமார்
பொன்முடி : திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்? பாஜக, அதிமுக ரியாக்‌ஷன் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com