உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்ததையடுத்து தொண்டர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.சசிகலா, தினகரன் கட்சியில் இல்லாதது தான் இதற்கு பெரிய காரணம் என்று தொண்டர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.இதனையடுத்து சசிகலா, தினகரனை கட்சியில் சேர்த்தால் மட்டுமே கட்சியை வலுப்படுத்த முடியும் என்று தொண்டர்கள் வலியுறுத்த தொடங்கினர்.
இதன் காரணமாக தேனீ மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களின் பண்ணை வீட்டில் அவரது முன்னிலையில் செயல் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் சையது கான், முன்னாள் எம்.பி பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் சையது கான்,"அ.தி.மு.க வை வலுப்படுத்த சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமென்று தேனீ மாவட்டம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து ஒருமுகமாக ஒரு முடிவிற்கு வந்ததாகவும், அம்முடிவை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னேர்செல்வத்திடம் பன்னீர்செல்வத்திடம் தெரிவித்ததாகவும்.அதற்கு பன்னீர்செல்வம் தொண்டர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறியதாக கூறினார்.