ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் அல்லது மஞ்சு விரட்டு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் உலகப் புகழ் பெற்ற ஊர் அலங்காநல்லூர். அலங்காநல்லூர் காளையை அடக்கியவர் தான் மாவீரர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வென்றது தான் சிறந்த காளை என அப்பகுதிகளில் சொல்லுவதுண்டு அப்படியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது.
பொங்கல் அன்று அவனியாபுரத்திலும் அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று அலங்காநல்லூரில் நடைபெறுகிறது.
கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் 300 வீரர்களும் பங்கேற்கின்றனர். வித்தியாசமான வாடிவாசல் அமைப்பு, கலகலப்பான மதுரை அண்ணன்களின் கமன்டரி சீறிப்பாயும் காளைகள் அலங்காநல்லூர் களையர்களுன் தொடங்கிவிட்டது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நியூஸ்சென்ஸ் யூடியூப் மற்றும் முகநூல் பக்கங்களிலும், இணையதளத்திலும் நேரலையில் காணலாம்.