chepauk Palace in chennai
chepauk Palace in chennaiTwitter

சென்னையில் இவ்வளவு பெரிய அரண்மனையா! இப்போது இந்த மாளிகை எப்படி இருக்கிறது?

மெரினா அருகே வாலாஜா சாலையில் உள்ள சேப்பாக்கம் அரண்மனை ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட ஆற்காடு நவாப்களின் சென்னை இல்லமாக இருந்தது. 1768 ஆம் ஆண்டு முதல் 1855 ஆம் ஆண்டு வரை ஆற்காடு நவாப்கள் அங்கு தான் வாழ்ந்து வந்தனர். இப்போது அந்த அரண்மனை எப்படி இருக்கிறது?

சென்னை மெட்ராஸாக இருந்தபோது குதிரை வண்டிகள், கட்டடங்கள் இல்லாத காலி இடங்கள், வரலாற்று சிறப்பு மிக்க மாளிகைகள் என விஷயங்கள் இருந்தன.

அந்த காலத்தில் மெட்ராஸில் இருந்த மன்னர்கள் குறித்தும், அவர்கள் பயன்படுத்திய அரண்மனைகள் குறித்தும் உங்களுக்கு தெரியுமா? இப்போது கூட சென்னையில் அது போன்ற அரண்மனைகள் உள்ளன. இந்த பதிவில் சேப்பாக்கம் அரண்மனை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

மெரினா அருகே வாலாஜா சாலையில் உள்ள சேப்பாக்கம் அரண்மனை ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட ஆற்காடு நவாப்களின் சென்னை இல்லமாக இருந்தது. 1768 ஆம் ஆண்டு முதல் 1855 ஆம் ஆண்டு வரை ஆற்காடு நவாப்கள் அங்கு தான் வாழ்ந்து வந்தனர்.

1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் வாரிசு இழப்புக் கொள்கையின் படி, ஆற்காடு நவாப்பின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

இது இப்போது மாநில அரசின் வருவாய் வாரியம் மற்றும் பொதுப்பணித் துறையால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது வருவாய் வாரிய கட்டிடம் என்று அழைக்கப்படும் இது நகரின் முந்தைய முகலாய பாணி கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

1768 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பொறியியலாளர் பால் பென்ஃபீல்டினால் வடிவமைக்கப்பட்ட இது 117 ஏக்கர் பரப்பளவில் இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது.

ஒன்று கூம் நதியிலிருந்து பைக்ராஃப்ட் சாலை வரை மற்றொன்று பெல்ஸ் சாலையிலிருந்து கடற்கரை வரை நீண்டுள்ளது. இந்தோ சாராசெனிக் பாணியில் கட்டப்பட்ட இது 1885 இல் சென்னை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. அரசாங்க அலுவலகங்களுக்கான தளமாக மாறுவதற்கு முன்பு இந்த அரண்மனை ஆண்டுகளாக காலியாக இருந்தது.

பெயர் காரணம்?

கர்நாடக நவாப், ஆறு தோட்டங்களைக் கொண்ட சேப்பாக்கத்தில் உள்ள கலாஸ் மஹாலில் வசித்து வந்தார். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆறு தோட்டங்கள் ‘சே பாக்’, இப்போது அதை சேப்பாக்கம் என்று அழைக்கிறோம்.

சேப்பாக்கம் அரண்மனையிலிருந்து வெகு தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குதிரைகளுடன் கூடிய பிரம்மாண்டமான தொழுவத்தை நவாப்கள் வைத்திருந்தனர்.

நாம் இப்போது கோடம்பாக்கம் என்று அழைக்கிறோம், இது 'கோடா பாக்' (குதிரைத் தோட்டம்) என்பதிலிருந்து உருவானது. ராயப்பேட்டை அதன் பெயர் 'ராய' (ராஜா) மற்றும் 'செல்லம்' (இடம்) என்பதிலிருந்து வந்தது.

 chepauk Palace in chennai
இந்திய காட்டிற்குள் அமைந்திருக்கும் அழகிய அரண்மனை - கட்டப்பட்டதற்கான பின்னணி என்ன?
  • ஏ ஃபார் அமீர் மஹால்,

  • பி ஃபார் பிரியாணி,

  • சி ஃபார் சென்னை,

  • டி ஃபார் தோனி

பாரம்பரிய நவாபி பிரியாணியை ருசிக்க மட்டுமே உயர் அதிகாரிகள் அரண்மனைக்கு வருகை தருவார்களாம். இங்கு வரும் அனைத்து பிரதிநிதிகளும் கண்டிப்பாக பிரியாணியை ருசிக்காமல் செல்லமாட்டார்கள் என நான்கு தசாப்தங்களாக மஹாலில் பிரியாணி சமைத்து வரும் நூர் பாஷா கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும், ஐபிஎல் சீசனின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை அழைத்து அமீர் மஹாலில் நவாபி பிரியாணி விருந்து அளித்ததாகவும், இதற்கு எம்எஸ் தோனி மிக பெரிய ரசிகர் எனவும் கூறுகின்றனர்.

 chepauk Palace in chennai
கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை: Muthunandini Palace பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com