Biryani: சென்னையில் பிரியாணி ATM - நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

இந்த இயந்திரத்தில் மெனு வைக்கப்பட்டிருக்கும். பிரியாணி பிரியர்கள் அதனை ஆராய்ந்து தங்களுக்கு வேண்டிய பிரியாணி வகையை பெற்றுக்கொள்ளலாம்.
Biryani: சென்னையில் பிரியாணி ஏடிம் - நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?
Biryani: சென்னையில் பிரியாணி ஏடிம் - நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?ட்விட்டர்
Published on

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள பிரியாணி வெண்டிங் மெஷின் சேவை மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

பொதுவாக பணம் எடுக்கத்தான் ஏடிஎம் மெஷின்கள் பயன்படுத்தப்படுகிறது. நமது அவசர தேவைக்கும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி விரைவில் வேண்டிய தொகையை இயந்திரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பணம் எடுக்க பயன்படும் ஏடிஎம் இயந்திரம் போலவே, வெளிநாடுகளில் உணவுகள், சிற்றுண்டிகள் பெறும் வெண்டிங் மெஷின்கள் நிறைய இருக்கும்.

நம் நாட்டில் அதனை பார்ப்பது அரிது தான். இப்படியான உணவு வெண்டிங் மெஷினில் நம் எல்லோருக்கும் பிடித்தமான பிரியாணி கிடைக்குமென்றால்?

பிரியாணி
பிரியாணி Canva

சென்னை கொளத்தூர் பகுதியில் பிரியாணி ஏடிஎம் இயந்திரம் ஒன்று மக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. தனியார் உணவகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது இந்த பிரியாணி இயந்திரம். இந்த தானியங்கி பிரியாணி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது இந்தியாவில் இதுவே முதல் முறை.

இந்த இயந்திரத்தில் மெனு வைக்கப்பட்டிருக்கும். பிரியாணி பிரியர்கள் அதனை ஆராய்ந்து தங்களுக்கு வேண்டிய பிரியாணி வகையை பெற்றுக்கொள்ளலாம்.

Biryani: சென்னையில் பிரியாணி ஏடிம் - நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?
"பசியோடு யாரும் உறங்கக்கூடாது" - 'Bread For All' திட்டத்தை அறிமுகப்படுத்திய துபாய் அரசு

க்யூஆர் கோட் மூலமாகவோ, அல்லது கார்ட் மூலமாகவோ பணம் செலுத்தும் வசதிகள் இயந்திரத்தில் உள்ளன. பணம் செலுத்திய பிறகு இயந்திரத்தின் திரையில் கவுண்ட் டவுன் ஒன்று தோன்றும். எவ்வளவு நேரத்தில் நாம் கேட்கும் பிரியாணி வரும் என்பதை அது குறிக்கும்.

கவுண்ட் டவுன் நின்றதும் ஒரு சிறிய கதவு போல இருக்கும், அதனை திறந்து பிரியாணி பொட்டலத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இது பலரது கவனத்தை பெற்று வருகிறது. எனினும், உணவின் தரம் குறித்த சந்தேகங்களும் ஒரு புறம் இருக்கின்றன.

பிரியாணி இந்தியர்கள் மிகவும் விரும்பும் உணவாக சமீப காலத்தில் மாறியுள்ளது. ஸ்விக்கி போன்ற உணவு சேவை நிறுவனங்கள் மூலம் கடந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி தான் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Biryani: சென்னையில் பிரியாணி ஏடிம் - நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?
இட்லி ATM : 24 மணி நேரமும் சூடான இட்லி- இணையவாசிகளை கவர்ந்த இட்லி பாட்| Viral Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com