அண்ணாமலை: ”காவல் துறை திமுகவின் பிடியில் இருக்கிறது” - சீரிய பாஜக தலைவர் - என்ன பேசினார்?

புகார் வந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எஃப் ஐ ஆர் இல்லை என்று கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறது என்றார். மேலும், காவல் துறையின் மீது திமுக நிர்பந்தம் அதிகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருந்தார்
அண்ணாமலை
அண்ணாமலைட்விட்டர்
Published on

பெண்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நேற்று கட்சியிலிருந்து விலகினார் காயத்ரி ரகுராம்.

தொடர்ந்து, தான் கட்சியிலிருந்து விலகியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் எனக் கூறியது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது குறித்து பேசிய அண்ணாமலை, ”கட்சியிலிருந்து யார் விலகினாலும், நல்ல எண்ணத்துடன் அவர் நன்றாக இருக்கவேண்டும் என வழி அனுப்புவது தான் என் வழக்கம்.

ஆனால், கட்சியிலிருந்து விலகுபவர்கள் என்னை புகழ்ந்துவிட்டு செல்லவேண்டும் என்பது இல்லை” எனக் குறிப்பிட்டார்.

மேலும், பாஜகவில் மகளிர் உறுப்பினர்கள் அதிகமாக இருக்கின்றனர், நிறைய பேர் கட்சிக்கு வருகின்றனர் என்பதனால், தனி நபர் கருத்துகளை வைத்து யாரும் பேசவேண்டாம் எனக் கூறியிருந்தார்.

தொடர்ந்து, உங்கள் தலைமையில் தான் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேட்டப்போது,

அண்ணாமலை, “என் மேல் குற்றம் சுமத்தாதவர்கள் யார்? பல பத்திரிக்கைகளில் நான் தான் இடம்பெறுகிறேன்.

அந்த கணக்கில், காயத்ரியின் குற்றச்சாட்டையும் நான் வைத்துக்கொள்கிறேன். எந்த பத்திரிக்கை என்னைப் பற்றி என்ன சொன்னாலும், அதற்கு எனது பதில் மௌனம் தான்” என்றார்.

சென்னையில் நடந்த திமுக கூட்டத்தின் போது, அக்கட்சியினை சேர்ந்த இரண்டு இளைஞர் அணி நிர்வாகிகள், அங்கிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன.

புகார் வந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எஃப் ஐ ஆர் இல்லை என்று கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறது என்றார். மேலும், காவல் துறையின் மீது திமுக நிர்பந்தம் அதிகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாஅகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

அண்ணாமலை
Rafale Watch : அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சுக்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?
அண்ணாமலை
அண்ணாமலைTwitter

ஈஷா மீது தொடர் குற்றச்சாட்டு இருப்பதாகவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஈஷா இயங்குகிறது என்ற முத்தரசனின் குற்றச்சாட்டு குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை,

“ஈஷாவிலிருந்து பெண் மாயமாகி பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. முத்தரசன் பாஜகவின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் கோவை சென்று ஐஜியை சந்தித்து, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறவேண்டும் என்றார்.

மேலும், சம்பந்தம் இல்லாமல் பாஜகவை குற்றம் சுமத்தக் கூடாது. ஒரு கருப்புக் கண்ணாடியை போட்டுக்கொண்டு எல்லாம் கருப்பாகத் தான் இருக்கிறது என்று சொல்லக்கூடாது என பேசியிருந்தார்.

அண்ணாமலை
Rafale Watch : அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சுக்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

தொடர்ந்து பத்திரிக்கையாளர் “நீங்களும் தான் திமுகவின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம்” என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,

“பத்திரிக்கையாளர் தூக்கத்துல இருக்கீங்க. நான் எந்த ஆதாரத்தை வெளியிடவில்லை? பிஜிஆர் டாக்குமெண்ட்டை நான் தருகிறேன் உங்கள் சேனலில் வெளியிடுங்கள்...அதை செய்யாமல், ஒரு கட்சிக்கு ஜால்ராஅடிக்கக் கூடாது” என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, ஒரு 40 ஆயிரம் ரூபாய் கேமரா, நான்கு பேரை வைத்துக்கொண்டு நாங்களும் நிருபர்கள் தான் என்று யூடியூப் சேனல்கள் கூறுவது அநியாயமாக இருக்கிறது எனவும் பேசியிருந்தார்.

மேலும் என்ன பேசியிருந்தார் என தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

 Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

 Follow us on:

 Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

 Nalam 360 : https://www.facebook.com/Nalam360

 Newsnow: https://www.facebook.com/GenZSense

 TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

 Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com