BJP அலுவலகம் கமாலாலயம் குண்டு வெடிப்பு :"இதற்கெல்லாம் பாஜக பயப்படாது" - கராத்தே தியாகராஜன்

தேர்தல் பணிகளைத் தடுக்கவே குண்டு வீசியுள்ளனர். இதற்கெல்லாம் பாஜக அஞ்சாது. பாஜக அலுவலகங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
கமாலாலயம் 

கமாலாலயம் 

Newssense

Published on

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று இரவு 3 மணிக்கு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தியாகராய நகர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நேரத்தில் அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டுகள் மூன்று மதுபாட்டில்களில் தயாரிக்கப்பட்டு வீசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கமலாலய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்பவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அலுவலக குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக பாஜக-வை சேர்ந்த கராத்தே தியாகராஜன், “ தேர்தல் பணிகளைத் தடுக்கவே குண்டு வீசியுள்ளனர். இதற்கெல்லாம் பாஜக அஞ்சாது. பாஜக அலுவலகங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது” எனக் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>கமாலாலயம்&nbsp;</p></div>
திருமாவளவன் : Jai Bhim, Allah Akbar கோஷமிட்ட விசிக தலைவர்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com