ஈபிஎஸ் குற்றச்சாட்டு
ஈபிஎஸ் குற்றச்சாட்டுட்விட்டர்

தமிழ்நாடு பட்ஜெட் 2023: ”23 மாத ஆட்சிக் காலத்தில்...”ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை

2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையை தொடங்கினார் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2023-24ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சட்டபேரவையில் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில்,  எதிர்கட்சி தரப்பில் oஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் சட்டப்பேரவைக்கு வருகை!

”திமுக- வின் திராவிட மாடல் வெற்றிநடை போடுகிறது” சட்டப்பேரவையில் பிடிஆர் தியாகராஜன் 

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும்போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த படை வீரர்கள் குடும்பதிற்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்வு

அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படும் 

IAS, IPS குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும். முதல் நிலைத் தேர்வு எழுதுபவர்களுக்கு மாதம் ரூ.7,500, முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 வழங்கப்படும். - நிதி அமைச்சர்

கடும் நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறையும் - நிதியமைச்சர் தியாகராஜன் 

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.100 வழஙுவதன் காரணமாக உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரித்திருக்கிறது

சோழர்களின் பெருமையை பறைசாற்றும் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைக்கப்படும்

சோழர்களின் பெருமையை பறைசாற்றும் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைக்கப்படும்

அதிக சுற்றுலா பயணிகள் வருவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அரசு உருவாக்கியுள்ள சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும். - நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் 

மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நாட்டில் நேரடி மானியமாக அதிக தொகை வழங்கும் முதல் திட்டமாக இது இருக்கும் 

தமிழர் பண்பாட்டு தலங்களை இணைப்பதற்கு கடல்வழி தமிழ் பண்பாட்டு பயணங்கள் ஊக்குவிக்கப்படும். இப்பயணங்கள் தமிழ் இனத்தின் வரலாறு, உணவுப்பழக்கங்களை வெளிகொண்டு வருவதுடன், நாட்டின் புகழையும் எட்டுத்திக்கும் பரப்பும் - நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன்

திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும், கிட்ட தட்ட இரண்டு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யவுள்ள நிலையில், திமுக அரசு சொத்துவரி, பால் விலை மின் கட்டணம் உயர்த்தியுள்ளது எனவும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

logo
Newssense
newssense.vikatan.com