Tamilnadu: காங்கிரஸ் MP ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இடங்களில் ரெய்டு - ஏன்?

INX மீடியா, ஏர்டெல் மேக்சிஸ் உள்ளிட்ட வழக்குகள் சிதம்பரத்தின் மீது நிலுவையில் உள்ளது. அத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம், இந்தியா வருவதற்காகச் சீனர்களுக்கு 260 விசாக்களை சட்ட விரோதமாக வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்
சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்Twitter

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்டெல் மேக்சிஸ் உள்ளிட்ட வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. அத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம், இந்தியா வருவதற்காகச் சீனர்களுக்கு 260 போலி விசாக்களை வழங்கியதாகவும் அதற்கு விசா ஒன்றுக்கு 50 லட்சம் வரை பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்
'விடியல் ஆட்சி' தொடரும் அடக்குமுறை - பா.ரஞ்சித் ஆவேசம்

இதற்கு முன்னதாக 4 முறை ப.சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ளது. கடந்த 2019-ல் ப.சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றையும் சிபிஐ அனுப்பியிருந்தது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் கீழ் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் ராஜியசபா எம்.பி தேர்தலுடன் தொடர்புடையது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டரில் "எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள். இதுவரை எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்" என பதிவிட்டிருக்கிறார்.

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்
திருவாரூர் பாஜக தலைவர் அண்ணாமலை திரண்ட கூட்டம்: புகைப்படம் போலியா? உண்மை என்ன ? Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com