மிக்ஜாம் புயல் கடந்து சென்ற 48 மணி நேரத்துக்கு பிறகும் சென்னை மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு கூட அல்லல்படும் நிலைதான் தொடர்கிறது.
அத்தியாவசிய பொருட்களான பால், தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமத்துக்கு மக்கள் ஆளாகியிருக்கின்றனர். வீடுகளுக்கு முன் தேங்கியிருக்கும் அழுக்கடைந்த தண்ணீரைக் கடந்து வெளியில் வருவது சிரமமென்றால் சாலை வரை வருபவர்களுக்கும் தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை.
அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் இந்த நேரத்தில் லாபம் ஈட்டும்நோக்கத்துடன் அதிகவிலைக்கு பொருட்களை விற்றுவருவது கண்டிக்கத்தக்கது.
மோட்டார் அல்லாத படகுகள், ஜேசிபிகள் ஆள் உயர தண்ணீர் இருக்கும் இடத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றின, என்றாலும் படகுகளுக்கு வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தட்டுப்பாடு நிலவியது.
10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கிய பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளைப் பொருத்தமட்டில் இன்னும் உதவியை எதிர்பார்த்துக்காத்திருக்கும் உயிர்கள் இருக்கின்றன.
உதவிதேவைப்படும் பலரும் உதவிகோரக் கூட முடியாத சூழலில் இருந்துவருகின்றனர். உறவினர்கள், நண்பர்களின் நிலை தெரியாமல் தவிக்கும் மனிதர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளின் வாயில்களில் பார்க்க முடிகிறது.
மொபை சிக்னல் இன்னும் பல இடங்களில் கிடைக்கவில்லை. சில இடங்களில் மொட்டை மாடியில் மட்டும் சிக்னல் கிடைக்கும் நிலை இருக்கிறது. இணையதள வசதி பல இடங்களில் முற்றிலுமாக முடங்கியிருக்கிறது.
வெளியூருக்கோ அல்லது ஓரளவு பாதுகாப்பான நிலையில் இருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கோ செல்ல நினைப்பவர்களுக்காக சாலைகள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளன. எந்த மெயின் ரோட்டிலும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை.
வட சென்னை பகுதியில் 6ம் தேதிவரை எந்தவித மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெறவில்லை. மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டரில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் வெகு சிலருக்கே கிடைத்துள்ளன.
மழை நின்றும் கூட இயல்புக்கு நிலைக்குத் திரும்ப முடியாமல் அச்சத்தில் இருக்கும் மக்களைக் காக்க அரசு இனியேணும் மீட்பு நடவடிக்ககளையும் நிவாரணம் வழங்குதலையும் துரிதப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக தங்கள் தேவைகளை சொந்தமாக பூர்த்தி செய்ய முடியாத எளியமனிதர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பது தன்னார்வலர்களின் குரலாக இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust