கிளாம்பாக்கமா? கோயம்பேடா? ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து புறப்படும்?

போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவுக்கு மாறாக சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கமா? கோயம்பேடா? ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து புறப்படும்?
கிளாம்பாக்கமா? கோயம்பேடா? ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து புறப்படும்?Twitter

தைப் பூசம், குடியரசு தினம் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஆம்னி பேருந்துகள் சங்கம் இந்த உத்தரவை ஏற்க முடியாது எனக் கூறியிருக்கின்றனர்.

சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும், இ.சி.ஆர். சாலை மார்க்கம் நீங்கலாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்பட வேண்டும் எனவும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு உரிய வசதிகள் இல்லை எனவும், 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தேவை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் புறப்படும்.

கிளாம்பாக்கமா? கோயம்பேடா? ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து புறப்படும்?
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் : சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com