தென் தமிழக வெள்ளம்: "நேசக்கரம் நீட்டிய மீனவர்கள்" - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

மீட்பு பணிகளில் அரசுடன் தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீனவர்கள் தங்கள் படகுகளை மீட்பு பணிகளிலும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளிலும் ஈடுபடுத்தியுள்ளனர்.
தென் தமிழக வெள்ளம்: "நேசக்கரம் நீட்டிய மீனவர்கள்" - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!
தென் தமிழக வெள்ளம்: "நேசக்கரம் நீட்டிய மீனவர்கள்" - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!Twitter

தென் தமிழகத்தில் கனமழை பெய்து 10 நாட்களை நெருங்கியும் இன்னும் வெள்ளபாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நிலை இருக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு இன்னும் மின்வசதி கூட கிடைக்காத நிலை உள்ளது.

மீட்பு பணிகளில் அரசுடன் தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீனவர்கள் தங்கள் படகுகளை மீட்பு பணிகளிலும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளிலும் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்களது பங்களிப்பை பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

"நேசக்கரம் நீட்டி நிவாரண பணிகளுக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், 'THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS' என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி சொன்னதை நினைவுபடுத்துகிறது.

அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்!”

தென் தமிழக வெள்ளம்: "நேசக்கரம் நீட்டிய மீனவர்கள்" - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!
தேவிபாரதி : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திய எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com