கோவை: ஆதியோகி கழுத்தில் இருக்கும் 7 பாம்புகள் எதை குறிக்கிறது? ஈஷா பற்றிய சுவாரஸ்யங்கள்

ஆதியோகி சிவன் சிலை ஆண்டு முழுவதும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். மக்கள் இங்கு தியானம் செய்யவும், யோகா பயிற்சி செய்யவும், ஆன்மீக வழிகாட்டுதலைப் பெறவும் வருகிறார்கள். இந்த ஈஷா மையம் குறித்த சுவாரஸ்யமாக தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Coimbatore Day : Everything You Need To Know About Adiyogi Shiva Statue
Coimbatore Day : Everything You Need To Know About Adiyogi Shiva StatueTwitter
Published on

ஆதியோகி சிவன் சிலை இந்துக் கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவையின் பிரபல சுற்றுலா தலமாக இருக்கும் இது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டது. இது 2017 ஆம் ஆண்டு தமிழகத்தின் கோயம்புத்தூரில் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

இச்சிலை யோகா மேம்பாட்டுக்காகவும், எழுச்சிக்காகவும் கட்டமைக்கப்பட்டது.

ஆதியோகி சிவன் சிலை ஆண்டு முழுவதும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். மக்கள் இங்கு தியானம் செய்யவும், யோகா பயிற்சி செய்யவும், ஆன்மீக வழிகாட்டுதலைப் பெறவும் வருகிறார்கள்.

ஈஷா அறக்கட்டளை யோகா வகுப்புகள், தியானம் மற்றும் கலாச்சார விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை சிலை தளத்தில் நடத்துகிறது.

குறிப்பாக சிவராத்திரி நிகழ்வுகளை

உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் இந்த இடம் பெரிதாக கவர்ந்து வருகிறது.

இதனை பொதுவாக மக்கள், ஈஷா மையம் என்றே அழைகின்றனர். இந்த ஈஷா மையம் குறித்த சுவாரஸ்யமாக தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

  • 600 க்கும் மேற்பட்ட சிற்பிகள் மற்றும் கைவினைஞர்களுடன் இந்த சிலையை உருவாக்க இரண்டரை ஆண்டுகள் ஆனதாம்.

  • ஆதியோகி சிலையின் கழுத்தில் சுருண்ட ஏழு பாம்புகள் மனித உடலில் உள்ள ஏழு ஆற்றல் மையங்களைக் குறிக்கின்றன. சுமார் 500 டன் எடை கொண்ட இந்த சிலை எஃகு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

  • இந்த சிலை இயற்கை பேரழிவுகள் மற்றும் கடுமையான வானிலை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

  • ஆதியோகி சிவன் சிலை 2019 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மார்பளவு சிற்பமாக கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்டது. இது 112 அடி உயரம் கொண்டது.

சிறுவாணி அருவி, தியானலிங்கம், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில், வெள்ளியங்கிரி மலைகள் மற்றும் சிறுவாணி அணை ஆகியவை ஆதியோகி சிவன் சிலைக்கு அருகில் பார்க்க வேண்டிய மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com