
தீபிகா அப்புக்குட்டி
வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிட 22 வயதான சட்டக்கல்லூரி மாணவி தீபிகா அப்புகுட்டிக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சியில் 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 55 ஆவது வார்டில் போட்டியிட தீபிகா அப்புக்குட்டி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதுள்ளது.
தீபிகா அப்புக்குட்டி
தீபிகாவின் தாய் அ.தி.மு.க சார்பில் திருப்பூர் மாநகராட்சியின் மேயர் பதவி வகித்து வந்தார்.ஜெயலலிதா மறைவிற்கு பின் கட்சி பிளவு பட்டதையடுத்து இவர் அ.ம.மு.க வில் சேர்ந்து கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்த விசாலாட்சியின் மகள் தீபிகாவுக்கு இம்முறை கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.