
Corona Lockdown
News Sense
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 890 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் ஜனவரி 10, 2022 வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவகம், விடுதிகளில், திரையரங்குகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றித் தொடர்ந்து செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Corona Omicron Variant
Pixabay
1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்,
1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படும்.
2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.
3) உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
4) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/ Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
9) உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.