சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், "மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சி செய்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் தமிழகத்தை பார்க்கிறார்கள். மாநில அரசு கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுத்த வரலாறு கிடையாது. மத்திய அரசு மனிதாபிமானத்தோடு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும். மக்கள் பாதிக்கப்படும்போது உதவி செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கடமை" என மத்திய கட்சிகளையும் தாக்கி பேசியிருக்கிறார்.
மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத அரசுக்கு கண்டனம்
எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்.
நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவத்துக்கு கண்டனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவர வலியுறத்தல்
ஆவின் பால்விலை உயர்வு, சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற களப்பணியாற்ற வலியுறுத்தி தீர்மானம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust