கன்னியாக்குமரி: பாழடைந்து கிடக்கும் இரணியல் அரண்மனையின் வரலாறு தெரியுமா?

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இரணியல் தமிழகத்துக்கு சொந்தமானது. பத்மநாபபுரம் அரண்மனையைப் போல கேரள அரசு இதனை உரிமைகோரவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உரிய பராமரிப்பு இல்லாமல் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்தது இரணியல் அரண்மனை.
கன்னியாக்குமரி:  பாழடைந்து கிடக்கும் இரணியல் அரண்மனையின் வரலாறு தெரியுமா?
கன்னியாக்குமரி: பாழடைந்து கிடக்கும் இரணியல் அரண்மனையின் வரலாறு தெரியுமா?Eraniel Palace / Vikatan
Published on

இரணியல் கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடமாகும். இந்த இடத்தில் ஒரு மதிப்புமிக்க அரண்மனையும் உள்ளது.

திருவிதாங்கூர் மற்றும் வேணாடு மன்னர்களால் ஆழப்பட்ட அரண்மனை அது. இதனை இரணுயல் கொட்டாரம் என அழைக்கின்றனர். கொட்டாரம் என்றால் தமிழில் அரண்மனை என்று பெயர்.

கன்னியாக்குமரி தமிழ்நாட்டுடன் இணைவதற்கு முன்னர் திருவனந்தபுரம் முதல் ஆரல்வாய்மொழி வரையிலான பகுதிகள் வேணாடு என அறியப்பட்டன. இதன் தலைநகராக இருந்தது இரணியல். இந்த அரண்மனைதான் இதற்கு வரலாற்றுச் சான்றாக இருக்கிறது.

நாகர்கோவிலில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அரண்மனை, 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது சுமார் 2.16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. குதிரை மாளிகை என அழைக்கப்படும் பிரதான அரண்மனை முதல் பகுதியில் உள்ளது.

Vikatan

அதன் பிறகு வசந்த மாளிகை எனப்படும் மன்னரின் படுக்கை அறை அமைந்துள்ளது. குதிரை மாளிகையின் முன்பகுதியில் ஒரு தர்பார் மண்டபம், உள் பகுதியில் நான்கு அறைகளும் உள்ளது.

பல அழகிய வேலைப்பாடுகள் அரண்மனையை கலைநயமிக்கதாக உருவாக்கியிருக்கின்றன. அரண்மனை வளாகத்தில் ஒரு சிறிய குளமும் உள்ளது.

இராணியல் ஒரு வணிக நகரமாக இருந்தது என்றும் அதற்கு இரணிய சிங்க நல்லூர் என்ற பெயரும் இருந்தது எனவும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான முனைவர் அ.கா.பெருமாள் பிபிசி தளத்தில் கூறியிருக்கிறார்.

இரணியல் திருவீதாங்கூர் சமஸ்தானத்தின் இரண்டாவது தலைநகராக செயல்பட்டு வந்தது. 1795ம் ஆண்டு தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டபோது இரணியல் நகரம் முக்கியத்துவம் இழந்தது.

Vikatan



அதன் பிறகு இங்கு மன்னர் குடும்பத்தினர் அல்லாமல் வீரர்கள், உயரதிகாரிகள் தங்கவைக்கப்பட்டனர்.

சுதந்திரத்துக்கு பிறகு மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இரணியல் தமிழகத்துக்கு சொந்தமானது. பத்மநாபபுரம் அரண்மனையைப் போல கேரள அரசு இதனை உரிமைகோரவில்லை.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உரிய பராமரிப்பு இல்லாமல் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்தது இரணியல் அரண்மனை.

தாவர சாய ஓவியங்கள் மறைந்துவிட்டன. மர வேலைப்பாடுகள் காணமல் போய்விட்டன. 1980கள் வரைக் கூட இந்த அரண்மனை நல்ல நிலையில் இருந்ததாக அ.க.பெருமாள் கூறியிருக்கிறார்.

கன்னியாக்குமரி:  பாழடைந்து கிடக்கும் இரணியல் அரண்மனையின் வரலாறு தெரியுமா?
Gujarat: படிக்கிணறு முதல் கண்ணாடி அரண்மனை வரை- 5 கண்கவர் Travel Destinations!



2014ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இரணியல் அரண்மனைக் கட்டடத்தை புதுப்பிக்க ரூ. 3 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். எனினும் புனரமைப்பு பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், தற்போது இரணியல் அரண்மனை ரூ 4.75 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு இப்பணிகள் துவங்கியுள்ளன.

இந்த தொகையைக் கொண்டு பிரதான அரண்மணையை மட்டும் புதுப்பிக்க உள்ளனர்.

கன்னியாக்குமரி:  பாழடைந்து கிடக்கும் இரணியல் அரண்மனையின் வரலாறு தெரியுமா?
இந்திய காட்டிற்குள் அமைந்திருக்கும் அழகிய அரண்மனை - கட்டப்பட்டதற்கான பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com