Sankagiri Fort : வரலாற்றுடன் வசீகரத்தை வழங்கும் சங்ககிரி கோட்டை - இவ்வளவு விஷயம் இருக்கா?

பிரிட்டிஷ் நிர்வாக கட்டிடம் மற்றும் இராணுவ கல்லறைகள் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். கோவில்களில் ஒன்று புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கோட்டை 10 நுழைவு வாயில்களைக் கொண்டுள்ளது,
Sankagiri Fort
Sankagiri FortTwitter

தமிழ்நாட்டின் ஈரோட்டில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவிலும், சேலத்திலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை, பார்வையாளர்களுக்கு இயற்கை அழகு மட்டுமில்லாமல் வரலாற்று முக்கியத்துவத்தின் வசீகரத்தையும் வழங்குகிறது.

இந்திய தொல்லியல் துறையால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த கோட்டை சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் ஆங்கிலேயர்களால் 12 சுவர்களைக் கொண்டு பலப்படுத்தப்பட்டது. மலையின் உச்சியில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை திப்பு சுல்தானின் இராணுவ தளமாகவும் பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் முக்கிய பங்கு வகித்தது.

மலையின் ஒரு பக்கம் ஏறக்கூடியதாகவும், மீதமுள்ள பக்கங்கள் செங்குத்தானதாக, ஏறுவதற்கு சவாலாக இருக்கிறது

கோட்டை வளாகத்திற்குள், பார்வையாளர்கள் ஒரு மரணக் கிணறு, இரண்டு கோவில்கள், இரண்டு எண்ணெய் குடோன்கள் மற்றும் இரண்டு மசூதிகள் உட்பட பல்வேறு கட்டமைப்புகளை ஆராயலாம்.

பிரிட்டிஷ் நிர்வாக கட்டிடம் மற்றும் இராணுவ கல்லறைகள் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். கோவில்களில் ஒன்று புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கோட்டை 10 நுழைவு வாயில்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சங்களைக் காட்டுகிறது.

Sankagiri Fort
Janjira Fort: இந்தியாவின் இந்த வீழ்த்தப்படாத கோட்டை பற்றி தெரியுமா?

காலப்போக்கில், சங்ககிரி கோட்டை பல்வேறு சேதங்களை சந்தித்துள்ளது. வளாகத்தில் உள்ள கடைசி கோவில் செட்டியார் வம்சத்தைச் சேர்ந்த ஒருவரால் கட்டப்பட்டது.

இந்த கோவிலில் திப்பு சுல்தான் மற்றும் தீரன் சின்னமலை தொடர்புடைய ஆயுதங்கள், நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் உள்ளிட்ட வரலாற்று கலைப்பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் முதல் மார்ச் வரை இதமான வானிலை இருப்பதால் சங்ககிரி கோட்டைக்கு செல்ல அதுதான் சரியான நேரமாகும். கோட்டை பார்வையாளர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும், இந்திய பார்வையாளர்களுக்கு ரூ 25 மற்றும் வெளிநாட்டவர்களுக்கு ரூ 300 நுழைவு கட்டணம்.

Sankagiri Fort
இலங்கை யாழ்ப்பாணம் கோட்டை : குருதியினால் கட்டப்பட்ட ஒரு நிலத்தின் வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com