செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்க வந்திருக்கும் வீரர்களுக்கு, பல்வேறு நாடுகளின் உணவு கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு பல வகையான உணவுகள் வழங்கப்படவுள்ளன. காலை, மதியம் மற்றும் இரவு விருந்துக்கு உணவுகளும் சூப் சாலட் போன்றவைகளும் பரிமாறப்படவுள்ளன,
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக சென்னையில் பல விதமான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. சென்னை நேப்பியர் பாலத்தின் ஒரு பகுதியில் சதுரங்க போர்டில் இருப்பது போல கருப்பு வெள்ளை நிறம் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது.
கோலாகலமான துவக்க விழா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாளை முதல் போட்டிகள் துவங்கும்.
இந்த ஒலிம்பியாட் போட்டிகள் முதன் முதலில் இந்தியாவில் நடக்கிறது. இதனால் போட்டியாளர்களுக்கு அளிக்கவிருக்கும் உணவுகளிலும் அதித கவனம் செலுத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்பதால் பன்னாட்டு உணவு வகைகள் மெனுவில் இடம்பெற்றுள்ளது.
உலக நாடுகளில் உள்ள உணவு கலாச்சாரத்திற்கு ஏற்ப மொத்தம் 77 உணவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மெனுவை தயாரித்தவர் 75 வயதான செஃப் ஜி எஸ் தால்வர்.
காலை, மதியம், டீ, மற்றும் இரவு உணவு என நான்கு வேளைகளில் உணவு பரிமாறப்படவுள்ளது. மொத்த 3500 வகையான உணவுகள் இருக்க, இதில் 700 வகையான மெயின் டிஷ் இருக்கும்.
இதை தவிர சூப், சாலட் போன்றவைகளும் பரிமாறப்படும். மேலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு டிஷ் பரிமாறப்படும் என்றும், ஒருமுறை பரிமாறப்பட்ட உணவை மறு முறை பரிமாறப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அரசு அதிகாரிகள் உணவு பட்டியலை சரிபார்த்து முடிவெடுக்கவே ஒருவாரக் காலம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust