கிளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்து கொள்ள இருக்கும் தமிழ் பெண்மணி வினி ராமன் குறித்து பலர் சமூக ஊடகங்களில் தேட தொடங்கி உள்ளனர்.
சரி யார் இவர்? ஒரு தமிழ் பெண்மணிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டருக்கும் காதல் அரும்பியது எப்படி?
மெல்போர்னில் பிறந்து வளர்ந்து மருந்தாளுனர் படிப்பை படித்தவர் வினி ராமன்.
தமிழ் பின்னணியை கொண்ட வினி ராமன் தமிழ்நாட்டில் பிறந்தவர் கிடையாது. இவர் பிறக்கும் முன்பே வினியின் பெற்றோர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர். ஆனாலும் தமிழ் பாரம்பரியத்தை இவர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அதனால்தான் திருமண பத்திரிக்கையை தமிழ் பாணியில் மஞ்சள் நிறத்தில் அடித்துள்ளனர். இவர்களின் திருமண பத்திரிக்கை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
வினி ராமனும், மேக்ஸ்வெலும் 2013 - ல் சந்தித்துக் கொண்டனர். அந்த சமயத்தில் இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
முதலில் வினி ராமனை கிளென் மேக்ஸ்வெல்தான் சந்தித்து பேசி இருக்கிறார்.
அதன்பின் இருவரும் அடிக்கடி சந்தித்த இவர்கள் நண்பர்களாக பழகி இருக்கின்றனர்.
காதலை முதன்முதலில் மேக்ஸ்வெல்தான் வினியிடம் 2017ஆம் ஆண்டு கூறி இருக்கிறார்.
அந்த சமயத்தில் மேக்ஸ்வெல் மன அழுத்தம் காரணமாக கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். வினிராமன் தான் மேக்ஸ்வெல் அதிலிருந்து மீள உதவி இருக்கிறார். இதன் காரணமாகவே வினி மீது மேக்ஸ்வெல்க்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அதன்பின் அதே வருடம் கிளென் மேக்ஸ்வெல் வினியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு பின் வினி கிளென் மேக்ஸ்வெல் காதலை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.அதன்பின் இருவரும் டேட் செய்துள்ளனர்.
பல நாடுகளுக்கு இவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர்.
அந்த புகைப்படங்கள் instagramஇல் உள்ளது.
2020ம் வருடம் பிப்ரவரி 21ம் தேதி இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயம் முடிந்த பின் இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் ஐபிஎல் தொடருக்காக இந்தியா வந்த போது வினியை உடன் அழைத்து வந்த்துள்ளார்.
மற்ற தொடர்களின் போதும் கிளென் மேக்ஸ்வெல் வினியை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.
ஆனால் கொரோனா காரணமாக இவர்கள் திருமணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் மார்ச் 27ம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையில் இந்த திருமணம் நடக்க உள்ளது.