Go Back Modi VS Vanakkam Modi - மீண்டும் இணையத்தில் ஹாஷ்டேக் போர்

மீண்டும் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையையொட்டி #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. மற்றொரு புறம் #Vanakkam_Modi என்ற ஹேஸ்டேக்கில் பிரதமர் மோடியை வரவேற்று வருகின்றனர்.
PM Modi
PM ModiTwitter
Published on

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் உரையாற்றுகிறார்.

நலத்திட்டங்களை துவக்கி வைத்த பின்னர், பிரதமர் மோடி இரவு 07.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இதற்காக சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஐந்தடுக்கு பாதுகாப்பிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Modi hastag
Modi hastagTwitter

இந்நிலையில், #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகத் தொடங்கியது. ஏற்கனவே, இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம், இது போன்ற ஹேஸ்டேக் டிரெண்டாவது வழக்கமாக இருந்தது.

தற்போது, மீண்டும் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையையொட்டி #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. மற்றொரு புறம் #Vanakkam_Modi என்ற ஹேஸ்டேக்கில் பிரதமர் மோடியை வரவேற்று வருகின்றனர்.

PM Modi
மோடி சென்னை வருகை : மக்களுக்கான மாற்று பாதையை அறிவுறுத்திய காவல்துறை - முழுமையான தகவல்

இதனை சில இணையவாசிகள் டிவிட்டரில் மீம்களால் ஷேர் செய்து #GoBackModi என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com