வீரப்பன் : சுற்றுலா தலமாகிறதா இவர் வாழ்ந்த குகை? எங்கே இருக்கிறது இந்த ஸ்பாட்?

தற்போது வீரப்பன் வாழ்ந்த குகையினை அரசு சுற்றுலா தலமாக மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரப்பன் : சுற்றுலா தலமாகிறதா இவர் வாழ்ந்த குகை? எங்கே இருக்கிறது இந்த ஸ்பாட்?
ட்விட்டர்

ஒரு காலத்தில் இந்தியாவை காட்டுக்குள் இருந்து கட்டுக்குள் வைத்திருந்தார் வீரப்பன். சந்தன கடத்தலுக்கும், தந்தங்களுக்காக யானையை கொன்றதற்கும், மனிதர்களை கொன்றதற்காகவும் வீரப்பன் அறியப்படுகிறார்.

இவரை கைது செய்ய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. பல முக்கிய பிரபலங்களை கடத்திவைத்து, நாட்டையே உலுக்கினார்.

சத்தியமங்கலம் பகுதியில் காட்டுக்குள் இருந்துவந்த இவரை கைது செய்ய ஆபரேஷன் குக்கூன் என்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் மாதம் 18ஆம் தேதி 2004ல் வீரப்பன் சிறப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்

தமிழ்நாடு அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜய்குமாரும், அதிரடிப்படையில் உளவுப்பிரிவு சிறப்பு எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக்கண்ணனும் ‘ஆபரேஷன் குக்கூன்’க்கு மூளையாக இருந்து செயல்பட்டனர்.

வீரப்பனை சுட்டுக்கொன்ற சம்பவம் பற்றி 2017ல் விஜயகுமார் ஐபிஎஸ் எழுதிய ‘சேசிங் தி பிரிகேண்ட்’ என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதில் முரண்பாடுகள் உள்ளதாக குற்றமும் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் வீரப்பன் பற்றிய ஆவணப்படம் ஒன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. அதில் அவரை தமிழ்நாட்டு காவல் துறையினர் எதிர்கொண்டு, அவர்களது திட்டத்தை நிறைவேற்றினர் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், தற்போது வீரப்பன் வாழ்ந்த குகையினை அரசு சுற்றுலா தலமாக மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, வீரப்பன் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்த கோபிநத்தம் பகுதிக்கு பொது மக்களை கூட்டிச் செல்ல வனத்துறையினர் சஃபாரி ஏற்பாடு செய்யவுள்ளனர்.

வீரப்பன் வாழ்ந்த காலத்தில், அந்த பகுதியில் அவரது கூட்டாளிகளின் நடமாட்டம் இருந்துதான் வந்தது. அந்த சமயத்தில், பொது மக்கள் மற்றும் காவல் துறையினரே அப்பகுதிக்கு செல்ல அஞ்சினர்.

வீரப்பன் சுற்றித்திரிந்த பகுதியை, வனத்துறையினர் அல்லது எஸ் டி எஃப் - வீரப்பனை கைது செய்ய உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடி படையினர் கண்காணித்து வந்தனர்.

வீரப்பன் மறைந்த பிறகு அப்பகுதியை காண பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்ததாக கூறப்படுகிறது

வீரப்பன் : சுற்றுலா தலமாகிறதா இவர் வாழ்ந்த குகை? எங்கே இருக்கிறது இந்த ஸ்பாட்?
கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை: Muthunandini Palace பற்றி தெரியுமா?

இப்போதைக்கு அங்கு ஜங்கிள் லாட்ஜஸ் அண்ட் ரிசார்ட்ஸுக்கு சொந்தமான தங்குமிடம் ஒன்று உள்ளது. இப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்குபவர்களுக்கு மட்டுமே வீரப்பன் இருந்த குகையை காண அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பொது மக்களும் காண வனத்துறையினர் ஏற்பாடுகள் செய்யவுள்ளனர். மைசூரு வட்டத்தின் தலைமை வனப் பாதுகாவலர் டாக்டர் மாலதி பிரியா இது குறித்து பேசுகையில்,

கோபிநத்தத்தில் சஃபாரி மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அப்பகுதியில் பொதுமக்களை அனுமதிக்க முன்மொழிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் காவிரி வனவிலங்கு சரணாலயம் தொடர்பான அதிகாரிகளை சந்தித்து சஃபாரி பாதை மற்றும் பிற வசதிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்டிருக்கிறார்.

வீரப்பனின் முன்னாள் கோட்டையை அதன் சுற்றுச்சூழல் சுற்றுலா தொகுப்பில் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக சேர்க்கும் முயற்சியையும் மேற்கொள்ளவுள்ளது மாநில வனத்துறை.

கர்நாடகா மற்றும் தமிழக எல்லைக்கு அருகில் உள்ள மலே மகாதேஷ்வரா மலையில் (எம்எம் ஹில்ஸ்) 'மர்மப் பாதை முகாமுக்கு' வீரப்பனின் முன்னாள் கூட்டாளிகளையும் இணைத்து அவரைப் பற்றி பயணிகளுக்கு சொல்ல திட்டமும் உள்ளது.

இதற்காக 1.3 கோடி ரூபாய் செலவுகளும் செய்யப்ப்ட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பன் : சுற்றுலா தலமாகிறதா இவர் வாழ்ந்த குகை? எங்கே இருக்கிறது இந்த ஸ்பாட்?
மதுரை To கொடைக்கானல்: உள்ளூர் மக்களை கவர ஒரு நாள் சுற்றுலா - எந்தெந்த இடங்கள் பார்க்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com