மெரினாவில் குழந்தைகளுக்கு ஹார்ஸ் ரைடிங் ஸ்கூல் - டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

சென்னை மெரினா கடற்கரையில், விரைவில் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பி.எஃப்.ஏ) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்குக் குதிரை சவாரி பயிற்சியை அளிக்க திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
Horse Ride
Horse RideTwitter
Published on

சென்னை மெரினா கடற்கரையில், குழந்தைகளுக்கு குதிரை சவாரி செய்ய பயிற்சி கொடுக்க விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பி.எஃப்.ஏ) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளனர்.

இந்த பயிற்சிக்காக மொத்தம் 100 குதிரைகள் தயார் செய்யப்படவுள்ளது. ஹார்ஸ் ரைடிங்கில் மிக்க ஆர்வம் கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு, இந்த திட்டம் நிறைவேறினால், இப்போது பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தப்படும் குதிரைகளைக் கொண்டு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Horse riding at beach
Horse riding at beachTwitter

கடற்கரையில், அம்மா சமாதிக்குப் பின்னால் அமைந்துள்ள இந்திய கடலோர காவல்படையின் 3 ஏக்கர் நிலமும், எழும்பூரில் உள்ள மாநில போலீஸ் குதிரை லாயத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பகுதி நிலமும் குதிரை சவாரி பள்ளிகளின் குதிரைகளுக்கான லாயங்களைக் கட்ட திட்டங்கள் செய்யப்படவுள்ளன. கொரோனா காலகட்டத்தில், பொழுதுபோக்கு குதிரை சவாரிக்காரர்களுக்கு பெரிதும் வருமானம் இல்லாமல், பல குதிரைகள் பட்டினியால் இறந்துவிட்டன.

Horse riding
Horse ridingTwitter

ஆகையால், இப்போது இருக்கும் 100 குதிரைகளையே பயிற்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், புதிய குதிரைகள் பயன்படுத்த அனுமதியில்லை என்றும் பிஎஃபே தெரிவித்துள்ளது. பி.எஃப்.ஏ இன் இணை நிறுவனர் ஷிரானி பெரேரா கூறுகையில், "குதிரைகளுக்கு அடைக்கலம் அளிக்குமாறு நாங்கள் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம், அதன் அடிப்படையில் சென்னை சிவானந்தா சாலையில் உள்ள மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தின் கீழ் குதிரைகளுக்கு ஒரு தற்காலிக லாயமும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் குதிரைகளுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார்" என்றார்.

குதிரைகள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு இந்த ஹார்ஸ் ரைடிங்க் ஸ்கூல் ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்று நம்பும் ஷிரானி, அது தன்னிறைவானதாகவும், உரிமையாளர்களுக்கும் குதிரைகளுக்கும் சிறந்த வாழ்வாதாரத்தைச் செய்துகொடுக்கும் என்றும் கூறினார்.

Horse Ride
தேசாந்திரியின் தடங்கள் : ஆர்டிக் பகுதியில் பனிக்கட்டி கட்டிடங்களில் ஒரு உலா! - | பகுதி 5

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com