காஞ்சிப்பட்டு வாங்கும் போது ஒரிஜினலானு எப்படி கண்டுப்பிடிப்பது? 6 சூப்பர் டிப்ஸ்

மற்ற இடங்களில் ஒரு பட்டுப்புடவை தயாரிக்க 3 நாட்கள் ஆகும். ஆனால், காஞ்சிபுர நெசவாளர்கள் 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். தரமான காஞ்சி பட்டுப்புடவை 700 கிராம் வரை இருக்குமாம். அதில் 100 கிராம் பாடர் உள்ள ஜரிகையில் 40 கிராம் வெள்ளி, 0.2 சதவீதம் தங்கம் கலந்திருக்கும் என்கின்றனர்.
How to identify original kanchi pattu
How to identify original kanchi pattuTwitter
Published on

பொதுவாக பட்டு என்று சொன்னதும் அனைவருக்கும் காஞ்சிப்புரம் தான் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டு உலகம் முழுவதும் புகழ் பெற்றது.

இதற்கு முக்கிய காரணம் நெசவு தொழிலாளிகளின் கை வண்ணம் தான். பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியம் மாறாமல் இதனை தயாரித்து வருகின்றனர்.

மற்ற இடங்களில் ஒரு பட்டுப்புடவை தயாரிக்க 3 நாட்கள் ஆகும். ஆனால், காஞ்சிபுர நெசவாளர்கள் 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

தினமும் நெசவுக்காக மட்டும் 10 மணி நேரம் செலவு செய்கின்றனர். திருவிழா, திருமணம் என விற்பனை அதிகமாக இருக்கும் காலங்களில் 16 மணிநேரம் நெசவு செய்வார்களாம்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நாடு முழுவதும் உள்ள கோவில்களில் உள்ள சிற்ப வடிவங்களை காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்கள் சேகரித்து வைத்துள்ளனர். அதனை சேலையில் வடிவமைத்துக் கொடுக்கின்றனர்.

தரமான காஞ்சி பட்டுப்புடவை 700 கிராம் வரை இருக்குமாம். அதில் 100 கிராம் பாடர் உள்ள ஜரிகையில் 40 கிராம் வெள்ளி, 0.2 சதவீதம் தங்கம் கலந்திருக்கும் என்கின்றனர்.

How to identify original kanchi pattu
நம் வீட்டில் எவ்வளவு தங்கம், பணம் வைத்திருக்கலாம்? தங்கத்துக்கு வரி கட்டவேண்டுமா?

ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை கண்டுபிடிப்பது எப்படி?

அசல் பட்டுப்புடவைகளைக் கண்டறிய சில முத்திரைகள் இடம் பெற்றிருக்கும். அவை,

  • கைத்தறியால் தான் நெய்யப்பட்டது என்பதற்கு அடையாளமாக பட்டுபுடவையில் கைத்தறி முத்திரை

  • காஞ்சி பட்டுப்புடவைக்கான புவிசார் குறியீடு

  • கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டதற்கான குறியீடு

  • அசல் பட்டுக்கான சில்க் மார்க் முத்திரை

  • மத்திய அரசின் கைத்தறி முத்திரை

  • பட்டுப்புடவையின் தரத்தை தமிழ்நாடு ஜரி சென்டர், மத்திய அரசின் தர பரிசோதனை மையம் போன்ற இடங்களில் டெஸ்ட் செய்து பார்க்கலாம்.

இங்குள்ள இயந்திரங்களின் மூலம் பட்டுப்புடவையில் எத்தனை சதவீதம் தங்கம் வெள்ளி உள்ளது என வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியும். இதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

How to identify original kanchi pattu
மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com