திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதரின் கோவில் இந்தியாவின் மிகப் பெரிய கோவிலும், உலகின் இரண்டாவது பெரிய கோவிலுமாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலுக்கு உலகளவில் இருந்து பக்தர்கள் சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
இந்த திருவரங்கம் அரங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதல் திருத்தலம் ஆகும். இதனை பூலோக வைகுண்டம் என்வும் அழைக்கின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ
இந்து மதக் கடவுளான மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ரங்கநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது. இங்கு மகாவிஷ்ணு பாற்க்கடலில் இருப்பது போல படுத்திருக்கும் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்
இக்கோவில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. திராவிட பாணி கட்டிடக்கலை என்பது தென்னிந்தியக் கோவில்களில் பிரபலமாக காணப்படும் கட்டிடக்கலை பாணியாகும். இங்கு வட இந்திய கோவில்களை ஒப்பிடுகையில் கோபுரங்கள், விமானங்கள் சிறியதாக இருக்கின்றன.
காவிரிக் கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இவர்களின் ராணுவ முகாமை அமைக்கவும் ஏதுவாக அமைந்தது கோவில்.
ஸ்ரீ ரங்கம் கோவிலின் ராஜகோபுரம் 237 அடி, அதாவது 72 மீ உயரமானது. இந்த கோபுரத்தில் படிப்படியாக மொத்தம் 11 சிறிய அடுக்குகள் உள்ளன
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் (டிசம்பர் - ஜனவரி) நடைப்பெறும் திருவிழாவுக்கு சுமார் 1 மில்லியன் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இக்கோவிலானது சுமார் 155 ஏக்கர் நிலப்பரப்பில், 4,116மீ (10,710 அடி) சுற்றளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தின் அடித்தளம் மட்டுமே 5720 அடியாகும்
ஸ்ரீ ரங்கம் கோவில் 7 பிரகாரங்கள் உள்ளன. இங்கு மொத்தமாக 21 அற்புதமான கோபுரங்கள் உள்ளன. தவிர வெளியில் இருக்கும் இரண்டு பிரகாரங்களில் முழுவதுமாக கோவில் பொருட்கள் விற்கும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன
ஸ்ரீரங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் 50 சன்னதிகள் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் சுமார் 1000 தூண்கள் இருப்பதால் இதனை ஆயிரம்கால் மண்டபம் என்று அழைக்கின்றனர். இந்த தூண்களில் மிகமும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
ரங்கநாதரின் கோயில் வளாகத்தில் கருடனுக்கு என்று ஒரு மிகப்பெரிய மண்டபம் உள்ளது. அழகாக செதுக்கப்பட்ட இருநூறு தூண்களைக் கொண்ட இந்த ஆலயம், கோவிலில் மிகவும் கலைநயமிக்க மண்டபமாகும். மண்டபத்தின் மையத்தில் ஒரு தனி சன்னதி உள்ளது, அதில் கருடன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு பெரிய சிலை வைக்கப்பட்டுள்ளது
இங்கு 800 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 640 கோயில் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளில் பல்வேறு மத மற்றும் சமூக தாக்கங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் சோழர், பாண்டியர், ஹொய்சாளர், விஜயநகரம் ஆகிய இந்திய வம்சங்களைச் சேர்ந்தவை என்று தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன.
கோவில் வளாகத்தின் சுவர்கள் மூலிகை மற்றும் காய்கறி வண்ணங்களைப் பயன்படுத்தி அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய நுண்ணறிவை அவை வழங்குகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust