நீதிமன்றத்துக்கு எதிராக பேசியக் கருத்துகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியானது முதல் திமுகவை எதிர்த்து பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் வெளிப்படையான சச்சரவுகள் நடந்து வரும் சூழலில் இந்த சிக்கலை திமுக எப்படிக் கையாளுகிறது என்பது குறித்து Newssense நேர்காணலில் பேசியிருக்கிறார் சவுக்கு சங்கர்.
சவுக்கு சங்கர் பேசியதாவது,
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தீர்மானம் போடட்டும், அப்போது துணிவுடன் பாஜக-வை எதிர்கிறது என்று ஏற்றுக்கொள்கிறேன்.
அல்லது, ஜனவரி மாதம் ஆளுநர் உரைக்கு அழைப்பு விடுக்காமல் சட்டமன்ற கூட்டத் தொடரைத் தொடங்கட்டும்.
இதற்கு முன்னர் இப்படி நடந்திருக்கிறது. செல்வி. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஆளுநரை அழைக்காமல் இருந்திருக்கிறார்.
இதுமட்டுமில்லாமல், ஆளுநர் உரையில் மத்திய அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை வையுங்கள். ஆளுநர் அதனை படிக்கவில்லை என்றால் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
குடியரசு தினத்தில் ஆளுநர் கொடியேற்ற வேண்டும். ஆனால் சென்னா ரெட்டியுடன் பிரச்னை இருந்ததால் முதலமைச்சராக ஜெயலலிதா கொடி ஏற்றினார். இப்படி செய்யுமா திமுக அரசு?
அண்ணாமலை - ஆளுநர் சந்திப்பை எப்படிப் பார்கிறீர்கள்?
அண்ணாமலை பிரதமர் வருகையில் பாதுகாப்பு குறைபாடு குறித்து ஆளுநரிடம் அறிக்கை அளித்துள்ளார். ஆவணங்களையும் சமர்ப்பித்திருப்பதாக கேள்விப்படுகிறேன். ஆளுநர் டிஜிபி-யிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். அறிக்கை வந்த பின்னர் தான் விவரங்கள் தெரியவரும்.
ஸ்டாலின் அமைச்சரிடம் கலகத்தலைவன் குறித்து கேட்டதை எடப்பாடி விமர்சித்திருக்கிறாரே?
ஸ்டாலின் மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை என்று எடப்பாடி தவறாக புரிந்துகொள்கிறார். ஸ்டாலின் மக்கள் பிரச்னை குறித்து தான் சிந்திக்கிறார் ஆனால் அது அவர் பெற்ற மக்களான உதயநிதி, செந்தாமரை மட்டுமே. அவர் திமுக தலைவரோ மக்கள் தலைவரோ அல்ல, ஒரு குடும்பத்தலைவர்.
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டுரையிலேயே இதனை எழுதியிருந்தேன்.
கலகத்தலைவன் ஓடும் திரையரங்குக்கு முன்னாள் அமைச்சரின் புகைப்படத்துடன் பேனர்கள் இருக்கிறது. எல்லா அமைச்சர்களும் கலகத்தலைவனை கட்டாயமாக பார்த்திருக்கின்றனர்.
நேர்காணலை முழுவதுமாக காண,
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust