ஜல்லிக்கட்டு 

ஜல்லிக்கட்டு 

Facebook

ஜல்லிக்கட்டு Live: "துணிவான வெற்றி" 28 காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடினார் 'விஜய்'

அவனியாபுரத்தில் இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கி வெற்றி பெற்றார் மதுரை ஜெய்ஹிந்த்பூரை சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய்

அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வருகை

இன்றையப் போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு நிஸான் மாக்னைட் கார் பரிசாக வழங்கப்படும்

கடைசி கட்டத்தை எட்டிய ஜல்லிக்கட்டு போட்டி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முதற் சுற்று நிறைவடைந்தது

ஜல்லிக்கட்டு போட்டியின் முதற் சுற்று நிறைவடைந்த நிலையில்,அதில் வெற்றிப் பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்கு தயாராகியுள்ளனர்

சீறிப்பாயும் தமிழ்நாடு காளைகள்!

காளையை பிடிக்க காத்திருக்கும் வீரர்கள்!

கூட்டத்தை பிளந்துகொண்டு திமிறிச் சென்ற காளை

சேலத்தை சேர்ந்த 3 வயது சிறுமி டோரா அவிழ்த்து விட்ட காளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி!

மது அருந்திவிட்டு வாடிவாசல் வந்த வீரர்

ஜல்லிக்கட்டில் களமிறங்கும் வீரர்களுக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அங்கு மது அருந்திவிட்டு வந்த ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

அதேப்போல போலியான முகவரி கொடுத்து விண்ணப்பம் செய்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட காளைகளௌக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், மருத்துவ பரிசோதனையின் போது  38 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன

களமிறங்க காத்திருக்கும் வடமுகத்து கருப்பன்:      அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், தான் ஆசையாக வளர்த்த காளை, வடமுகத்து கருப்பு காளையை களமிறக்க போகிறார் 17 வயது சிறுமி.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. இதில் இப்போது வரை 10 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்

அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு இரண்டாவது சுற்று நிறைவு

தெறிக்கவிட்ட காளை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போன வேகத்தில் மாடு திரும்பியதால் அலறியடித்து ஓடிய வீரர்கள். மாட்டின் உரிமையாளரே பயந்து தெறித்து ஓடிய வேடிக்கை

வாடிவாசலில் மூன்றாவது சுற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது

எல் இ டியில் மிரட்டும் காளைகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண மைதனத்திற்கு வெளியில் எல் இ டி திரை பொருத்தப்பட்டுள்ளது. இதில் வாடிவாசல் ஜல்லிக்கட்டை நேரலையில் மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்

ஜல்லிக்கட்டில் வெற்றிபெறுபவர்களுக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் உருவம் பதித்த தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் மூன்றாவது சுற்று நிறைவடைந்துள்ள நிலையில்,தற்போது வரை 197 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 3 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேருக்கு காயம், 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் பெயரில் அவிழ்த்துவிடப்பட்ட காளை வெற்றிபெற்றுள்ளது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நான்கு சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரில் அவிழ்த்துவிடப்பட்ட மாடு தோல்வி

வாடிவாசலில் நடைப்பெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் திமிறிக்கொண்டு வந்த 15 காளைகளை ஒரே சுற்றில் அடக்கி முதலிடத்தை பிடித்துள்ளார்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது. இதுவரை நான்கு சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சுற்று சூடுபிடித்திருக்கிறது. இதில் அடுத்ததாக நடிகர் சூரியின் காளை களமிறங்கவுள்ளது

விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், திமிலைப் பிடித்து அடக்க முயன்ற வீரரை தூக்கி எறிந்தது காளை

தான் அடக்கிய காளையினை அவிழ்த்துவிட்ட பெண் அழகுப்பேச்சியி என்ற மாணவியிடமே அவர் வாங்கிய பரிசை வழங்கியுள்ளார் மாடுபிடி வீரர் விஜய்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கப்பட்ட கலவரம் மற்றும் சுடுகாட்டுப்பேய் ஆகிய இரண்டு காளைகள் பெரும் கவனம் பெற்றன். சீறிப்பாய்ந்தோடிய காளைகளை அடக்க துரத்தி சென்றனர் காளையர்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாலர்களின் கவனத்தை வெகுவாக பெற்று வருகிறது கமெண்டரி . "தங்கத்துக்கு தங்ககாசு, பிடிச்சா இப்புடி புடிக்கணும்" போன்ற வார்த்தைகள் பார்வையாளர்களை ஈர்க்கிறது

வாடிவாசல் ஜல்லிக்கட்டு போட்டிகள் 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 23 காளைகளை அடக்கி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் 8வது மற்றும் கடைசி சுற்றை எட்டியுள்ளது. மிகவும் சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், போலீஸ் தடியடி

காலை 6 மணியளவில் தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்தது. சரியாக மாலை ஐந்து மணிக்கு போட்டிகள் நிறுத்தப்பட்டன.வெற்றிப் பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்க்கும் விழா நடைபெறவுள்ளது

"துணிவான வெற்றி"

அவனியாபுரத்தில் இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கி வெற்றி பெற்றார் மதுரை ஜெய்ஹிந்த்பூரை சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய். இவருக்கு நிஸான் கார் வழங்கப்பட்டது

logo
Newssense
newssense.vikatan.com