Jallikattu

Jallikattu

Facebook

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : சிங்கப்பூர் டிக்கெட் முதல் datsun கார் வரை - அட்டகாச பரிசுகள்

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. மொத்தம் 523 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. மொத்தமாக 300 மாடுபிடி வீரர்கள் கலந்துள்ளனர்.
Published on

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெற்றது. 2000த்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க, அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் தயாராக இருந்தன. அமைச்சர் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் போட்டி தொடங்கியது.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு,ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக மொத்தம் 6 சுற்றுகள்நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன்முறையாக முதல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் கார் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பரிசாக சேபாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வழங்கும் இரு சக்கர வாகனம் அறிவிக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>Avaniyapuram&nbsp;</p></div>

Avaniyapuram 

Twitter

போட்டியின் முடிவில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்தி 24 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். வலையங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் 19 காளைகளை அடக்கி 2வது பரிசை பெற்றார்.

“டி-சர்ட் அழுக்கே ஆகல அந்த தம்பி வெளிய நிக்கலாம்” , “எல்.கே.ஜி படிக்கிற தம்பி இங்க வந்து நிக்கிற?” என ரகளையான கமன்டரியுடன் போட்டி நடைபெற்றது.

அண்டா, புடவை, கிஃப்ட் பாக்ஸ், தங்க காசு, வெள்ளி காசு, கார், பைக், என பல பரிசு பொருட்களுடன் ஹெல்மட் போன்ற வித்யாசமான பொருட்களும் இடம் பெற்றது. முதன் முறையாக கலந்துகொண்ட அனைத்து காளைகளையும் அவிழ்த்து வரலாறு படைத்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

logo
Newssense
newssense.vikatan.com