பொங்கல் பண்டிகை வருகிறது என்றால், நமக்கு உடனே தோன்றுவது ஜல்லிக்கட்டு. மஞ்சு விரட்டு, ஏறு தழுவதல் என்று பல பெயர்களில் அறியப்படும் இது தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று.
சீறிப்பாய்ந்தோடும் காளைகளை விரட்டிப்பிடித்து இளைஞர்கள் அதனை அடக்குவர். பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கும். இதில் பலருக்கு காயங்களும் ஏற்படும். எனினும், விவசாயிகளின் உற்ற நண்பனாக இருக்கும் மாடுகளை, அதன் பங்களிப்பை போற்றும் விதமாகவும் ஜல்லிக்கட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களிலும், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தேனி ஆகிய இடங்களிலும் தை மாதத்தன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது
சல்லி என்றால், மாட்டின் கழுத்தில் கட்டப்படும் வளையம். புளியங்கம்பினால் வளையம் செய்து, அதனை மாட்டின் கழுத்தில் கட்டிவிடுவது மரபு. ”சல்லிக் காசு” எனப்படும் நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்பில், மஞ்ச கயிற்றால் கட்டப்பட்டிருக்கும். இதுவே சல்லிக்கட்டு என்று அறியப்பட்டது. காலப்போக்கில் இது மருவி, ஜல்லிக்கட்டு என்றானது.
காளைகளை துரத்திக்கொண்டு ஓடி, அதனை அடக்கி, கொம்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த துணியை அவிழ்ப்பவருக்கு, அந்த பணம் சொந்தமாகும்.
கூர்மையான கொம்புகள், ஆஜானுபாகுவான தோற்றம், சிறிய மலைக்குன்று போன்ற திமிலுடன் கம்பீரமாக நிற்கும் காளையினை அடக்குவது தான் சவால். ஜல்லிக்கட்டுக்கு என்றே பிரத்தியேகமாக, காளைகள் வளர்க்கப்படுகின்றன.
இவை பிறப்பிடம், நிறம், தன்மை ஆகியவற்றால் வகைப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு என்றவுடன் முதலில் தோன்றுவது காங்கேயம் காளைகள் தான். ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில்காங்கேயம் வளர்க்கப்படுகின்றன. பிறக்கும்போது சிவப்பு நிறத்திலும், வளர வளர சாம்பல் நிறமாகவும் இவை மாறுகின்றன.
மயிலை, பிள்ளை, செவலை காரி என நான்கு உட்பிரிவு இனங்கள் காங்கேயம் காளைகளில் உள்ளன. ஜல்லிக்கட்டுகாக வளர்க்கப்படும் காளைகள் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன
இவையும் ஜல்லிக்கட்டுக்காக பிரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன. இவை சிவகங்கை, மதுரை ஆகிய ஊர்களை சுற்றியுள்ள பகுதிகளை பூர்வீகமாக கொண்டவை. இவை கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களில் காணப்படுகின்றன.
புலியை தனது கூரிய கொம்பால் குத்திக் கொன்றதால் இவற்றிற்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பெரிய திமில், கூர்மையான கொம்பு மற்றும் சீறிபாயும் வீரியத்திற்கு பெயர் பெற்றவை இந்த காளைகள். இவை 5 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே திட்டுக்களுடன் பெரிய திமில், சிறிய கால்களுடன் கூடிய இவை ஈரோடு பர்கூர் மலையை சேர்ந்தவை. இவற்றின் கொம்புகள் சற்றே வளைந்து கூர்மையாக காணப்படும். ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படுத்தப்படும் இவை, அதிக கோபமும், முரண்பிடிக்கும் தன்மையும் கொண்டவை. பர்கூர் செம்மற மாடுகள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன.
நீண்ட கால்கள், தடித்த கொம்புகள் முன்நோக்கிய நெற்றியுடன் காணப்படும் இவை ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணப்படுபவை. கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இந்த வகை மாடுகள் இருக்கும். ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படும் காளைகளில் இவையும் ஒன்று. காவேரி மாடு, மராட்டியன் மாடு என்றெல்லாமும் இவை அழைக்கப்படுகின்றன.
இவற்றை தவிர குட்டை மாடு, பாலமலை மாடு, துருஞ்சலசேரி மாடுகளும் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust