ஜல்லிக்கட்டு Day 2 : முதல் பரிசை தட்டிச் சென்ற சின்னப்பட்டி தமிழ்செல்வன்!
கோலாகலமாக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், அதிரடியாக 23 காளைகளை அடக்கி, முதல் பரிசாக நிஸான் காரை வென்றார் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற வீரர்
தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இரண்டாவது நாளாக நடைபெற்ரு வருகிறது. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் கோலாகலமாக தொடங்கியது ஜல்லிக்கட்டு
தமிழ்நாடு வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்
களமிறங்கியது சசிகலாவின் காளைமாடு
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்தது சசிகலாவின் மாடு
துணிவு பொங்கல்
ஜல்லிக்கட்டு போட்டியை காண குடும்பத்துடன் பாலமேடு வந்த துணிவு பட நடிகர் ஜான் கொக்கேன்
எல்லைகள் கடந்த தமிழனின் பெருமை
பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்த வெளிநாட்டவர்கள்
”நீ வேணா சண்டைக்கு வாடா”
பாலமேடு ஜல்லிக்கட்டில் உசிலம்பட்டியை சேர்ந்த காளை ஒன்று தன்னந்தனியாக வீரர்களை மிரட்டியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. காளை சீறிப்பய்ந்து வந்ததை கண்ட வீரர்கள் அடிபடாமல் தப்பிக்க வேலிகல் மீதேறி நின்றனர்
பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் நின்றுகொண்டு வெகு நேரமாக எந்த வீரரையும் கிட்ட நெருங்க விடாமல் மிரட்டிய காளை
பாலமேடு ஜல்லிக்கட்டில் நடைபெற்று வரும் மைதானத்தில் அந்த பகுதியின் சுகாதாரத் துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கிய நிலையில், முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. இதில் ராஜா, மணி என்ற இரு மாடு பிடி வீரர்கள் தலா 9 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளனர்
வாடிவாசலில் இருந்து வெளிவந்த காளையை துரத்திப்பிடித்து அடக்க முயன்ற வீரரை தன் கொம்பை வைத்து காளை தாக்க முயன்றதால் பரபரப்பு. தெறித்து ஓடிய வீரர்
துணிவாக பேசிய துணிவு வில்லன்!
பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண குடும்பத்தினருடன் வந்திருந்தார் துணிவு பட நடிகர் ஜான் கொக்கேன். அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, நம் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். மதுரையில் ஜல்லிக்கட்டு என்றாலே உற்சாகம் வந்துவிடும் எனவும் அவர் கூறினார்
பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், பதிவு செய்த வீரருக்கு பதிலாக வேறொருவர் களமிரங்கியுள்ளார். இதுவரை பத்து பேர் ஆள்மாறாட்டம் செய்துள்ளது தெரியவந்ததில், அனைவரும் வெளியேற்றப்பட்டனர்
பால்மேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க வந்திருந்த காவலர்கள் நின்றிருந்த பக்கமாக காளை ஒன்று பாய்ந்ததில், காவல் துறையினர் மிரண்டனர்
மாடுபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்!
அதிக காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தில் இருந்த வீரர், காளை மாடு தாக்கியதில், தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.
மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு!
மதுரை பாலமேட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை லாவகமாக அட்க்கி மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் வீரர் அரவிந்த் ராஜ். அப்போது ஒரு காளை இவரது வயிற்றைக் குத்திக் கிழித்ததில், மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அரவிந்த் ராஜ் உயிரிழந்தார்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதிலிருந்து இதுவரை 690 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 215 வீரர்கள் களம் கண்டுள்ள நிலையில், 31 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர். அரவிந்த் ராஜ் என்ற இளஞர் உயிரிழந்துள்ளார்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், தனது காளையை அவிழ்த்துவிட்டு விட்டு, களத்தில் நின்று உற்சாகப்படுத்தினார் அன்னலட்சுமி என்ற பென். இது பார்ப்பவர்கள் கவனத்தை ஈர்த்தது. இவரது காளை அடக்கப்பட்டாலும், இவர் அளித்த ஊக்கதிற்காக இவருக்கு பரிசு வழங்கப்பட்டது
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 7 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதுவரை 771 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோலாகலமாக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஆரவாரத்துடன் முடிவுக்கு வந்தது
கோலாகலமாக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், அதிரடியாக 23 காளைகளை அடக்கி, முதல் பரிசாக நிஸான் காரை வென்றார் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற வீரர். 19 காளைகளை பிடித்து மணி 2ஆம் இடத்தையும் மற்றும் 15 காளைகளை பிடித்து ராஜா 3ஆம் இடத்தையும் பிடித்தனர்