கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு; யுவராஜ்-க்கு 3 ஆயுள் தண்டனை!

முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், யுவராஜ் மற்றும் அவரது கார் ஒட்டுநர் அருண் இருவருக்கும் 3 ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
கோகுல்ராஜ்

கோகுல்ராஜ்

Twitter

சேலம் மாவட்டதைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் ஆவணக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ்க்கு நீதிமன்றம் 3 ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த சுவாதி என்ற கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 11 பேர் மீது, திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

<div class="paragraphs"><p>யுவராஜ்</p></div>

யுவராஜ்

Twitterர்

<div class="paragraphs"><p>கோகுல்ராஜ்</p></div>
கோகுல்ராஜ் கொலை வழக்கு : யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் உத்தரவு

இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 5ம் தேதி காலை 11 மணிக்கு வழக்கின் தீர்ப்பு வெளியானது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். அதேவேளையில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், யுவராஜ் மற்றும் அவரது கார் ஒட்டுநர் அருண் இருவருக்கும் 3 ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் மற்ற குற்றவாளிகளான குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் 2ஆயுள் தண்டனையும், சந்திரசேகரன் ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு மற்றும் கிரிதர் ஆகியோர்கு 5வருட கடுங்காவல் தண்டனை மற்றும் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com