எழுத்தாளர் அகரமுதல்வன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் தொடராக எழுதிய கதை கடவுள் பிசாசு நிலம்.
2021 செப்டம்பர் மாதம் முதல் 2022 ஏப்ரல் வரை 70 பகுதிகளாக வெளியானது.
வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளை முன்னிட்டு இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் அதன் முதல் பார்வை இன்று வெளியாகியிருக்கிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் பத்திரிகையாளர் பரிசல் கிருஷ்ணா தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டனர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது பதிவில்,
"விகடன் பிரசுரம்" வெளியிடும் எழுத்தாளர் அகரமுதல்வனின் "கடவுள் பிசாசு நிலம்".
ஈழமக்களின் வாழ்வையும் அதன் தொன்மச் செறிவையும் உரிமைக்கான போராட்டக்களத்தில் முன்வைக்கும் இந்தக் "கடவுள் பிசாசு நிலம்" தமிழ் இலக்கிய வெளியில் மிகமுக்கியமான வருகையாக அமைய வாழ்த்துகிறேன்
எனப் பதிவிட்டிருந்தார்.
இயக்குநர் த.செ. ஞானவேல்,
"விகடன் பிரசுரம்" வெளியிடும் எழுத்தாளர் அகரமுதல்வனின் "கடவுள் பிசாசு நிலம்" புனைவுப் பிரதியின் அட்டைப்படத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடவுள்... பிசாசு.. நிலம்.. நூல் தமிழ் இலக்கியத்திற்கு நல்வரவு ஆகுக. அன்பும்.. வாழ்த்தும்..
பத்திரிகையாளர் பரிசல் கிருஷ்ணா,
ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோதே, பல்வேறு தரப்பட்ட வாசகர்களின் பாராட்டைப் பெற்ற ஒரு தொடர். ஈழமக்களின் வாழ்வை, போர் நிலத்தின் வெம்மையிலிருந்து அகரமுதல்வன் பதிவு செய்துள்ள இப்புதினத்தின் அட்டைப்படம்.. இதோ!
எனக் கூறியிருக்கிறார்.
கடவுள் பிசாசு நிலம் நாவலுக்கான ஓவியங்களை ஓவியர் பாலகிருஷ்ணன் வரைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகரமுதல்வன் ஈழத்தை சேர்ந்த எழுத்தாளர். இப்போது சென்னையில் வசித்து வருகிறார்.
கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் நாவல் எழுதி வருகிறார். இவரது பெரும்பாலான படைப்புகள் தமிழ் ஈழ பின்னணியில் உருவாகியிருக்கின்றன.
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, கோவை வாசகர் வட்ட கவிஞர் மீரா விருது, தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழும விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
உலகின் மிக நீண்ட கழிவறை குறுநாவலுக்கு பிறகு அவர் எழுதிய முதல் நாவல் கடவுள் பிசாசு நிலம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust