கலைஞர் 100: ஸ்டாலின், கமல்ஹாசன் கலந்துகொள்ளும் விகடனின் பிரம்மாண்ட புத்தக வெளியீட்டு விழா!

திரைத்துறை, பத்திரிகைத்துறை, அரசியல் என பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர் கலைஞர். தேர்தல் வெற்றி தோல்விகளைக் கடந்து மக்களின் கவனத்தை எப்போதும் அவர்பக்கம் வைத்திருந்தார்.
கலைஞர் 100: ஸ்டாலின், கமல்ஹாசன் கலந்துகொள்ளும் விகடனின் பிரம்மாண்ட புத்தக வெளியீட்டு விழா!
கலைஞர் 100: ஸ்டாலின், கமல்ஹாசன் கலந்துகொள்ளும் விகடனின் பிரம்மாண்ட புத்தக வெளியீட்டு விழா!Twitter

கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகத்தில் பிரம்மாண்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழக வரலாற்றை அவரைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது எனுமளவு 60 ஆண்டுகாலம் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமை கலைஞர்.

திரைத்துறை, பத்திரிகைத்துறை, அரசியல் என பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர் கலைஞர். தேர்தல் வெற்றி தோல்விகளைக் கடந்து மக்களின் கவனத்தை எப்போதும் அவர்பக்கம் வைத்திருந்தார்.

விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொகுக்கப்பட்டு `கலைஞர் 100' என்ற நூல் வெளியிடப்படுகிறது.

கலைஞர் 100 புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். முதல் பிரதியை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் திரைத்துறையின் உலக நாயகனுமான கமல்ஹாசன் பெற்றுக்கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்த, தி இந்து குழும இயக்குநர் என்.ராம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்க்குநருமான மனோஜ்குமார் சொந்தாலியா, தினத்தந்தி இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினமலர் வர்த்தக - தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் எல்.ஆதிமூலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்கள். ஆனந்த விகடனின் ஆசிரியர் தி.முருகன் நன்றியுரை வழங்கவிருக்கிறார். 

வரும் செப்டம்பர் 20ம் தேதி, மாலை 5:30 மணிக்கு கலைவாணர் அரங்கில் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com