காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் : இரு பிரிவினருக்கு இடையே தகராறு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழாவில் வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
வரதராஜ பெருமாள் கோவில்
வரதராஜ பெருமாள் கோவில்Twitter

சித்ரா பவுர்ணமியையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த உற்சவத்திற்காகக் கோயிலிலிருந்து சுவாமி புறப்பட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கல், தூசி போன்ற பல்வேறு கிராமங்களில் மண்டகப்படி கண்டு அருளியபடி ஐயங்கார் குளம் சஞ்சீவராயர் திருக்கோவிலில் எழுந்தருளினார்.

சிறப்பான அலங்காரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அக்கோவிலின் அருகில் பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறக்கி 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து, மண்டபத்தில் வைத்து, தீபாராதனை செய்து நெய் வேத்தியம் படைக்கப்பட்டது.

இந்நிலையில் பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் இரு பிரிவினர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இடையே முகம் சுளிப்பை ஏற்படுத்தியது.

வரதராஜ பெருமாள் கோவில்
வரதராஜ பெருமாள் கோவில்twitter
வரதராஜ பெருமாள் கோவில்
சித்திரை மாதம் : சிறப்பு மிக்க விரதங்களும் வழிபாடுகளும்

கோவில் உற்சவத்தின் போது பிரபந்தம் பாடத் தென்கலை பிரிவினருக்கே உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பெரிய திருவிழாவின் போதும் இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு, இதற்கு ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com