Marayoor: மூணார், உடுமலைபேட்டை நடுவில் குழுகுழு ஸ்பாட் - என்னென்ன இடங்களைப் பார்க்கலாம்?

சட்டென சென்றுவரவும், பட்ஜெட்டுக்குள் சுற்றுலாவை முடிக்கவும் திட்டமிட்டால் மறையூருக்கு வண்டியைத் திருப்புங்கள்!
Marayoor: மூணார், உடுமலைபேட்டை நடுவில் குழுகுழு ஸ்பாட் - என்னென்ன இடங்களைப் பார்க்கலாம்?
Marayoor: மூணார், உடுமலைபேட்டை நடுவில் குழுகுழு ஸ்பாட் - என்னென்ன இடங்களைப் பார்க்கலாம்?Twitter
Published on

பசுமையாக, அமைதியாக, நீர் சூழ, வனம் சூழ உங்கள் வார இறுதியைக் கழிக்க விரும்பினால் மறையூர் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.

வார இறுதியில் கிடைக்கும் ஓரிரு நாட்களை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நம் அனைவருக்குமே தோன்றும்.

இதுவரை செல்லாத இடத்துக்கு சென்று பார்க்காத மரம், செடி, கொடிகளை அனுபவிப்பதைத் தவிர வேறென்ன சிறப்பாக நம்மால் செய்திட முடியும்?

அப்படி சட்டென சென்றுவரவும், பட்ஜெட்டுக்குள் சுற்றுலாவை முடிக்கவும் திட்டமிட்டால் மறையூருக்கு வண்டியைத் திருப்புங்கள்!

உடுமலைப் பேட்டையில் இருந்து மூணார் செல்லும் வழியில் இருக்கிறது இந்த மறையூர். உடுமலைப் பேட்டையில் இருந்து இங்கு பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.

மறையூர் டவுனில் இருந்து அருகில் உள்ள கேம்ப் ஸ்டேவுக்கு ஜீப்பில் கரடிமுரடான பாதையில் பயணிக்க வேண்டும். பயணத்துக்கு திட்டமிடும்போதே, கேம்ப் ஸ்டேவிலும் பேசிவிடுவது நல்லது.

மண் வீடு, மர வீடு மற்றும் கூடாரங்களிலும் தங்கலாம். இது வனப்பகுதிக்கு அருகில் இருப்பதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் யானைகளைப் பார்க்க முடியும்.

அருகில் உள்ள காந்தளூரும் இப்போது பேசப்படும் சுற்றுலாத்தளமாக இருக்கிறது. இங்கிருந்து மூணாரும் 41 கிலோமீட்டர் தான்.

மறையூரில் மலையேற்றம் மேற்கொள்வதும், வலுகிச்செல்லும் பாறையில் ஸ்லைடிங் செய்வதும் அட்டகாசமானதாக இருக்கும்.

அருகில் உள்ள அமராவதி அணை மற்றும் சில பகுதிகளுக்கும் சென்றுவரலாம். அமைதிகாகவும் கொஞ்சம் அட்வெசரஸாகவும் உங்கள் பயணத்தை நிறைவு செய்யலாம்.

ஜீப், ஷேர் ஆட்டோக்கள் அதிக பணம் வசூலிக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு ட்ரிப்பையும் தெளிவாக பேசிவிட்டு தொடருங்கள்.

மறையூர் பயண அனுபவங்களை தெரிந்துகொள்ள,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com