மதுரை : மீனாட்சி அம்மன் முதல் கறி தோசை வரை - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

சினிமாவிலும், கதைகளில் இரத்தம் தெறிக்கும் மதுரையை தான் பெரும்பாலும் மக்கள் கேள்விப்படுகின்றனர். 20ம் நூற்றாண்டுக்கு பிறகு, தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொண்ட மாடர்ன் மதுரையைப் பற்றி பேசும் கதைகள் குறைவு தான்.
மதுரை : மீனாட்சி அம்மன் முதல் கறி தோசை வரை - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்
மதுரை : மீனாட்சி அம்மன் முதல் கறி தோசை வரை - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்Twitter

மதுரை இந்தியாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. வைகை நதிக்கரை ஓரம் உருவான இந்த ஊர் 2500 ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக தமிழ் நிலத்தில் முக்கியத்துவம் பெறும் நகரமாக திகழ்கிறது மதுரை

பாண்டிய மன்னர்கள் மதுரையை தலை நகரமாக கொண்டு ஆட்சி செய்துள்ளனர். தமிழத்துக்கு இரண்டாவது தலைநகர் எனப் பேச்செடுத்தால் முன்வரிசையில் நிற்கிறது மதுரை.

சினிமாவிலும், கதைகளில் இரத்தம் தெறிக்கும் மதுரையை தான் பெரும்பாலும் மக்கள் கேள்விப்படுகின்றனர். 20ம் நூற்றாண்டுக்கு பிறகு, தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொண்ட மாடர்ன் மதுரையைப் பற்றி பேசும் கதைகள் குறைவு தான்.

தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான மதுரைக் குறித்து நாம் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்களைக் காணலாம்.

கோவிலை மையமாக கொண்ட நகரம்

மதுரை நகரத்தில் எந்த சந்தில் நீங்கள் இருந்தாலும் அங்கிருந்து சரியான பாதையில் நடந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர முடியும்.

எல்லாத் தெருக்களும் மீனாட்சியம்மன் கோவிலைக் மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கும். கண்ணை மூடிக்கொண்டு நடந்தாலும் கோவிலின் எதாவது ஒரு நுழைவு வாயிலை அடைய முடியும்.

மதுரை மல்லி

சாதாரண மல்லியின் மொட்டானது இரண்டு முதல் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கும். மதுரை மல்லியின் இதழ்கள் வட்ட வடிவில் நான்கு அடுக்குகளைக் கொண்டது. அதனால்  இம்மல்லியின் மொட்டுக்கள் தாமதமாகவே விரியும். மதுரை மல்லியின் மணமும் தனித்ததாக இனிமையானதாக இருக்கும்.

சிங்கப்பூர், மலேசியா, குவைத், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு மலராகவும், நாற்றாகவும் ஏற்றுமதியாகிறதுன் மதுரை மல்லி. 2013ம் ஆண்டு மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மதுரை : மீனாட்சி அம்மன் முதல் கறி தோசை வரை - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்
தமிழ் நாட்டில் மிஸ் செய்யக் கூடாத 5 மலை ஏற்றங்கள்! - ஓர் அட்டகாச பயணம்

தூங்கா நகரம்

பல கிராமமக்கள் ஒன்றாக சந்தித்து வணிகம் செய்யும் நகரமாக மதுரை இருப்பதனால் இரவெல்லாம் ஆட்களின் போக்குவரத்து இருப்பது வழக்கம்.

அதனால் இரவெல்லாம் அவர்களுக்கான உணவு விடுதிகளும் திறந்தே இருக்கும். மதுரையில் இரவுகளில் மிகவும் ரம்யமான வாழ்க்கை இருப்பதைக் காணலாம்.

நடு ராத்திரியிலும் பரோட்டா, ஜிகர்தண்டா என நினைத்தை வாங்கி சாப்பிட முடியும்.

மதுரை உணவுகள்

மதுரையில் எப்போதும் பஜ்ஜி, வடை, போண்டா சூடாக கிடைக்கும். இதற்கான பிரத்யேக கடைகளும் உள்ளன. ஒரு நாளுக்கு 2 லட்சம் உளுந்து வடைகள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

கறி தோசை, பன் பரோட்டா எல்லாம் மதுரையின் தனித்துவமான உணவுவகைகள். தமிழ்நாட்டில் பிற இடங்களில் இவைக் கிடைத்தாலும் மதுரையில் சாப்பிடுவது போல வராது என்பார்கள்.

கேப்பை புட்டு, கோதுமைப் புட்டு, அரிசி மாவு புட்டு என பல புட்டு கடைகளையும் மதுரையில் காண முடியும். அத்தோ, போஜோ, மொயிங் என பர்மா உணவு வகைகளையும் மதுரையின் சாலைகளில் சாப்பிட முடியும்.

சீனிப்பால், பாதாம் பால், கற்கண்டு பால் என பாலிலேயே பல வெரைட்டிக் கொடுப்பவர்கள் மதுரைக்காரர்கள் தான்.

வணிக வளாகங்கள்

மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்தராய மண்டபம் என்ற புது பண்டபம் உள்ளது. இது 17ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.

இங்கு பல கலை சிற்பங்கள் விற்பனை செய்ய அரசு முடிவு செய்து கடந்த ஆண்டு இங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று கடைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இங்கு புத்தகக் கடைகள், சீர்வரிசைப் பாத்திரங்கள், பூஜை, யாகசாலைப் பொருட்கள், வளையல் கடைகள், சாமியாடிகள், அழகர் வேடக்காரர்களுக்கான சாமான்கள் என்று சுமார் 300 கடைகள் செயல்பட்டுவந்தன.

தவிர இப்போது மதுரையில் நவீன மேற்கத்திய வணிக வளாகங்களும் பெருகிவிட்டன. அங்கு கே.எஃப்.சியும் பல ஹை ஃபை உணவகங்களும் உள்ளன.

மதுரை : மீனாட்சி அம்மன் முதல் கறி தோசை வரை - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்
மதுரை : உலகளவில் பழமையான நகரங்கள் பட்டியலில் ஒரு தமிழ் நகரம் - வாவ் செய்தி

பாலின சமத்துத்தில் ஆட்சிமுறை

மதுரையை எப்போதும் ஆட்சி செய்வது மீனாட்சி சுந்தரேஸ்வர் என மக்கள் நம்புகின்றனர்.

ஆட்சி செய்வதற்கு அடையாளமாகச் செங்கோல் மீனாட்சியிடம் 6 மாதமும், சுந்தரேஸ்வரரிடம் 6 மாதமும் இருக்கும்.

அதாவது ஆண், பெண் சமம் என்ற தத்துவத்தை முன்னிறுத்தும் வகையில் இந்த அதிகாரப் பகிர்வு அமைந்திருக்கும்.

மதுரை : மீனாட்சி அம்மன் முதல் கறி தோசை வரை - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்
கீழடி அவிழும் மர்மம்: குதிரை எலும்புகள் ஏன் கவனிக்க வேண்டியவை? - சவால்விடும் மதுரை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com