Sharmika: சர்ச்சையில் சிக்கிய சித்த மருத்துவர் - இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்

சித்த மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Dr. Sharmika
Dr. SharmikaNews Sense
Published on

பாஜகவின் சிறுபான்மை அணி பிரிவின் தலைவியாக இருப்பவர் டெய்சி சரண். இவரின் மகள் தான் ஷர்மிகா. சித்த மருத்துவரான இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.

இவர் அவ்வபோது பல ஊடங்களுக்கு பேட்டி கொடுத்து வருவார். உடல் நலம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்து வருவார். அதில் சில பதில்களுக்காக ட்ரோல்களில் சிக்கிக் கொண்டார்.

நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் நமக்கு ஜீரணம் ஆகாது

ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை ஒரேநாளில் கூடும்.

கணவன் மனைவி சேர்வதால் மட்டும் குழந்தை பிறந்துவிடாது.

பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்தக் கூடாது.

குப்புறப்படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும்

நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும்

என்றெல்லாம் பேசியிருந்தார்.

இவர் சொல்வதற்கு மருத்துவ ரீதியாக எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதற்காகவே இவ்வாறு மருத்துவர் ஷர்மிகா பேசி வருவதாக பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சித்த மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆணையர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Dr. Sharmika
கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் உதைக்கிறார்கள் தெரியுமா? 6 சுவாரஸ்ய உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com