புயல் மழையால் ஆவின் பால் விநியோகம் தடையின்றி பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் சா.மு.நாசர்
அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் ஆலையில் நள்ளிரவு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் நாசர்.
பால் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு செய்து, அவை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார் அமைச்சர் நாசர்.
அனைத்து பகுதிகளுக்கும் சுமுகமாக பால் விநியோகம் செய்ய துறையின் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்ததோடு, பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் உறுதியளித்தனர்.
அப்போது, பால் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு வாகனத்திலும் பால் அளவு குறித்து அமைச்சர் பார்வையிட்டார்.
மற்ற நாள்களைப் போல் பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்படுவதாகவும், விநியோகத்தில் தாமதம் ஏற்படவில்லை என்றும் ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பால் பற்றாக்குறை அல்லது விநியோகம் குறித்து எந்த புகாரும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust