தமிழ்நாடு பட்ஜெட் 2024: சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாடு பட்ஜெட் 2024: சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு!Twitter

தமிழ்நாடு பட்ஜெட் 2024: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்பு செலவை அரசே ஏற்கும்!

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள்

  • சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ₹2 கோடி ஒதுக்கீடு

  • அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்

  • தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு

  • முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்

  • ₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்

தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள்

  • கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்

  • கீழடியில் திறந்தவெளி அரங்கு ₹17 கோடி செலவில் அமைக்கப்படும்

  • சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்

நிதி ஒதுக்கீடு

  • 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ₹356 கோடி ஒதுக்கீடு

  • 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ₹500 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்

சிங்காரச் சென்னை

  • சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு

  • சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு

  • சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு

  • வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு

கலைஞரின் கனவு இல்லம்

‘கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ₹3500 கோடி ஒதுக்கீடு. ஒரு வீட்டின் மதிப்பீடு ₹3.5 லட்சமாக நிர்ணயம்

சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு

▪️ மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு

▪️ அடையாறு நதி சீரமைப்புக்கு ₹1500 கோடி ஒதுக்கீடு

▪️ சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு

▪️ சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ₹430 கோடியில் புதிய திட்டம்

நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு!

மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ₹3050 கோடி ஒதுக்கீடு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹13,720 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு

அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும்

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்

▪️ பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

▪️ இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

▪️ பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு

பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ₹26 கோடி ஒதுக்கீடு!

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு

  • ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு

  • நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு

  • தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடி ஒதுக்கீடு

விண்வெளி பூங்கா அமைக்கப்படும்

▪️ தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா ₹120 கோடியில் அமைக்கப்படும்

▪️ விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

▪️ குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்

▪️ மதுரையில் 25,00 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்

சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ₹12,000 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும்

பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் இலவச Wifi சேவை வழங்கப்படும்

மெட்ரோ ரயில் சேவை

2025 டிசம்பரில் சென்னை பூவிருந்தவல்லி - கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்

பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்திற்கு ₹10 கோடி ஒதுக்கீடு!

500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் -அமைச்சர் தங்கம் தென்னரசு

2024-25 நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் 

2025 மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் நிலுவையில் உள்ள கடன் ₹8.33 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு!

logo
Newssense
newssense.vikatan.com