அபி சித்தர்
அபி சித்தர்ட்விட்டர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live: அபி சித்தர் - 26 காளைகளை அடக்கி சத்தலாக முதலிடம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அசால்ட்டாக 26 மாடுகளை அடக்கி முதல் பரிசை தட்டி சென்றார் அபி சித்தர் என்ற மாடு பிடி வீரர்.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண, இளைஞர்நலத்துறை, விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,நடிகர் சூரி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வருகை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், தன்னந்தனியாக வீரர்களை விரட்டிய காளை!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண்கிறது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்திருக்கும் விலங்குகள் நல வாரிய தலைவர் மிட்டலுக்கு பொன்னடை போர்த்தி மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கப்பட்ட நடிகர் சூரியின் காளை பிடிப்பட்டது

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் கருப்பன், வெள்ளைகொம்பன் ஆகிய காளைகள் பிடிபடாமல் வெற்றி பெற்றன

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 மாடுபிடி வீரர்கள், 6 உரிமையாளர்கள், 1 பார்வையாளர் என இதுவரை 15 பேர் காயம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பெயரில் அவிழ்த்துவிடப்பட்ட காளை வெற்றி பெற்றது

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின், மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் முகம் பதித்த மோதிரங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நேரில் கண்டு களித்தனர்

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பார் என விளையாடு துறை அமைச்சர் கூறியுள்ளார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருக்கும் அபி சித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் கொண்டுவந்த வேன் மோதியதில் அபி சித்தருக்கு காயம் ஏற்பட்டுள்ளது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் போலீஸ் வேன் மோதி காயம் ஏற்பட்ட நிலையிலும், தொடர்ந்து காளைகளை அடக்கி, முதலிடத்தினை தக்கவைத்துள்ளார் அபி சித்தர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க காத்திருந்த பொது மக்கள் மீது போலீசார் தடியடி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அசால்ட்டாக 26 மாடுகளை அடக்கி முதல் பரிசை தட்டி சென்றார் அபி சித்தர் என்ற மாடு பிடி வீரர். இரண்டாவது இடத்தை அஜய் (20 காளைகள்) மற்றும் மூன்றாவது இடத்தை ரஞ்சித் (12 காளைகள்) ஆகியோர்  வென்றனர்

logo
Newssense
newssense.vikatan.com