தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.
அந்த சந்திப்பில் கன்னியாக்குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு 1000 ரூபாயும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு 6000 ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் மத்திய பாஜக அரசு வழங்கிய 450 கோடி வழக்கமாக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தொகைதான் என்றும் நிவாரணம் அல்ல என்றும் கூறியதுடன் சென்னைக்கு மட்டும் தமிழ்நாடு அரசு 1500 கோடி செலவழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள், "வெள்ள பாதுகாப்பு பணிகளை திமுக அரசு சரியாக கையாளவில்லை என எதிர்கட்சி தலைவர் குற்றம்சாட்டுகிறாரே?" எனக் கேள்வி எழுப்ப, முதல்வர் ஸ்டாலின். "யார் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டவரா?" என கேள்வி எழுப்பினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust