Morning News Today : புகழ்பெற்ற புர்ஜ் தமிழ்! பார்வையிட்ட முதல்வர் - முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்.
Stalin
StalinTwitter
Published on

துபாயில் ஸ்டாலின் புர்ஜ் கலிபாவில் தமிழ்!

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் சென்றார். துபாய் சர்வதேச நிதி மையத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி வரவேற்றார். அவருடன் அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறையின் துணை மந்திரி டாக்டர் தானி பின் அகமது ஜையூதி உடனிருந்தார். அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமீரக மந்திரிகளுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்துப் பேசினார் ஸ்டாலின். மேலும் இசையயைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் ஸ்டூடியோவுக்கு சென்றார். நேற்றைய தினம் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, கீழடி குறித்த ஆவணப்படங்கள் திரையிடப்பட்டது.

TATA IPL
TATA IPL Twitter

ஐ.பி.எல் போட்டிகள் இன்று தொடக்கம்!


15 - வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

vaccine
vaccine Twitter

ஆஸ்திரேலியாவில் 4- வது டோஸ் கொரோனா தடுப்பூசி!

ஆஸ்திரேலியாவில் குளிர்காலத்துக்கு முன்னதாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட பழங்குடியினர், ஊனமுற்றோர் பராமரிப்பு இல்லங்களில் இருப்போர், நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசியைச் செலுத்த ஆஸ்திரேலியாவின் மருத்துவக் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்திருக்கின்றனர் இது 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஆகும். நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிராக தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3-வது டோஸ் தடுப்பூசி, (முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி) செலுத்தப்படுகிறது

அலெக்சாண்டர் லுகாஷென்கோ
அலெக்சாண்டர் லுகாஷென்கோTwitter

ரஷ்யாவுக்கு ஆதரவான பெலாரஸ் அதிபர்மீது ஆஸ்திரேலியா நடவடிக்கை!

உக்ரைன்மீது போர் செய்யும் ரஷ்யாவுக்கு பெலாரஸ் நாடு ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சர்வதேச நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ஆனால், ரஷ்யாவுக்கான ஆதரவைத் தொடர்ந்து வரும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அவரின் குடும்ப உறுப்பினர்கள்மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது.

இறையன்பு
இறையன்பு Twitter

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளப் பிடித்தம் - தலைமைச் செயலர் இறையன்பு


மார்ச் 28 , 29-ம் தேதி பல கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக சில மத்திய வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றால் சம்பளம் தரப்படாது என்று அரசு ஊழியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும்,

"ஒவ்வொரு துறைத் தலைவர்களும் அவர்களின் நிர்வாகத்தின்கீழ் வரும் அனைத்து அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் வருகை குறித்த தொகுப்பு அறிக்கையை 28 மற்றும் 29-ந்தேதி காலை 10.15 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்." எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.

petrol
petrolTwitter

தொடரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, நேற்று ஒரு லிட்டர் 104 ரூபாய் 43 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 94 ரூபாய் 47 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com